நடனத்தின் நளினத்தை ரசித்த ஓவியன்!

By காமதேனு

ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in

புகழ்பெற்ற ஓவியர்கள் அனைவருக்குமே ஒரு தனித்துவ அடையாளம் உண்டு. அது அவர்கள் எடுத்துக்கொள்ளும் ஓவிய வகையாகவோ, கருப்பொருளாகவோ, வண்ணங்களைப் பயன்படுத்தும் விதத்திலோ மாறுபடலாம். அந்த வகையில் இப்ரனிஸ காலத்திய ஓவியரான எட்கர் டெகாஸ் என்ற பிரெஞ்ச் ஓவியருக்கு நடனத்தின் மீது அப்படியொரு காதல். அது பெண்கள் மீதான ஈர்ப்பின் காரணமாகக் கூட இருக்கலாம்.

இவருடைய பெரும்பாலான ஓவியங்கள் நடனக் காட்சிகள்தான். நடனம் ஆடும் பெண்மணிகள், நடனம் நடக்கக்கூடிய இடத்தின் சூழல், நடனம் ஆடுபவர்களின் உணர்வு நிலைகள் ஆகியவற்றையே தனது ஓவியங்களில் அதிகம் பதிவு செய்திருக்கிறார்.

நடனக் காட்சிகளை இவரை விட சிறப்பாக வரைந்தவர்கள் இல்லையென்று சொல்லும் அளவுக்குப் புகழ்பெற்றவராகத் திகழ்கிறார். நேரடி காட்சிக்கும் இவருடைய ஓவியத்துக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம். அந்த அளவுக்கு மிக நேர்த்தியாக, தத்ரூபமாக நடனக் காட்சிகளை வரைவார். நடனமாடும் பெண்களின் அசைவுகள், அவர்களுடைய உணர்வுகள் ஓவியங்களில் அப்பட்டமாக வெளிப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE