லதா ரகுநாதன்
lrassociates@gmail.com
முதுகில் கனமான பையைத் தூக்கிக்கொண்டு நீண்ட நேரம் நடக்கிறீர்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை, உட்கார்ந்து இளைப்பாற ஒரு இடம்கூட தென்படவில்லை. அரை மணி நேரமாக பஸ்ஸுக்காகக் காத்திருக்கிறீர்கள். உங்களுக்கான பஸ் மட்டும் வரவேயில்லை – இதுபோன்ற சூழல்களை நாம் பல முறை கடந்துவந்திருப்போம். நீண்ட தூரப் பயணங்கள், ட்ரெக்கிங் என்று நடந்து நடந்து களைத்துப்போகும்போது, ‘பேசாமல் கூடவே ஒரு நாற்காலியைக் கொண்டுவந்திருக்கலாம்’ என்று பலரும் நினைத்திருப்பார்கள். இப்படி உட்கார வாய்ப்புக் கிடைக்காமல் நீண்ட நேரம் நின்றுகொண்டே இருப்பவர்கள், நடந்துகொண்டேயிருப்பவர்களுக்கு வெரிகோஸ் வெய்ன், ஸ்பாண்டிலைட்டிஸ், முட்டித் தேய்மானம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்தத் தொல்லைகளிலிருந்து நம்மை விடுவிக்க வந்துவிட்டது ‘லெக்ஸ்’ (LEX).
அது என்ன லெக்ஸ்?
நம் உடலில் அணிந்துசெல்லும் ஒரு நாற்காலி இது. நினைத்தபோது நினைத்த இடத்தில் பிரித்துப்போட்டு அமர்ந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்டது. 8 மில்லிமீட்டர் தடிமனில் வடிவமைக்கப்பட்ட இந்த பயோனிக் அணிகலன், புற உடற்கூடு (exoskeleton) என்று செல்லமாக அழைக்கப்படுகிறது