ஆசை மச்சான் வாங்கித் தந்த ஜிப்பா..!

By காமதேனு

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

காலைல ஆறு மணிக்கு முகூர்த்தம். ஒரு மணி நேரப் பயணங்கிறதால “நாலு மணிக்கே முழிச்சிருங்க”ன்னு வீட்ல மிரட்டி படுக்க வெச்சாங்க. பயத்துல முழிச்சு முழிச்சு நேரம் பார்த்ததுல நாலு மணி நெருங்குறப்ப வாடா ராஜா வான்னு தூக்கம் என்னை அள்ளி மடியில போட்டுக்கப் பார்த்துச்சு. “இன்னும் எந்திரிக்கலியா?”ன்னு ஒரு குரல் டிடிஎஸ் எஃபெக்டில் உள்ளருந்து கேக்கவும் பதறி எந்திரிச்சேன்.

பல்ல வெளக்கிட்டு சேவிங் செய்யலாம்னு கண்ணாடியைப் பார்த்தா... காணோம். சொவத்துல மாட்டியிருந்த கண்ணாடி எங்கே போச்சு..? “நேத்திக்கு எடுத்தேன்... திருப்பி வைக்கல போல. இதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டமா. சும்மா குளிச்சுட்டு வாங்க. அங்கே ஒங்கள யாரு பார்க்கப் போறாங்க?”ன்னு அசால்ட்டா பதில் வந்துச்சு. எங்கே வச்சாங்கன்னு மறந்துட்டாங்கனு புரிஞ்சுது.

“ஒண்ணு புரிஞ்சிக்க. அது அது இருக்க வேண்டிய எடத்துல இருக்கணும். நம்ம இஷ்டத்துக்கு இடம் மாத்தக் கூடாது. எங்க ஆபீஸ்ல இதுக்காக வகுப்பே எடுப்பாங்க தெரியுமா...” தம் கட்டி அஞ்சு நிமிசம் பேசினேன். அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம் மாதிரி ஒத்த வரியில மேட்டர முடிச்சுட்டாங்க. “போங்க... போய்க் குளிங்க. நேரம் போவுது.”

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE