புரட்சி செய்யும் கலை!

By காமதேனு

ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in

பெரும் புரட்சிகளின் பின்னணியில் எப்போதுமே கலைக்குப் பிரதான இடமுண்டு. நாடகங்கள், கவிதைகள், பாடல்கள், மாபெரும் புத்தகங்கள் பல புரட்சிகளுக்கு வித்திட்டிருக்கின்றன. அந்த வரிசையில் நிச்சயம் ஓவியங்களுக்கும் இடமுண்டு. குறிப்பாக சுவரோவியங்கள்.

இப்போதும்கூட புரட்சிகள், போராட்டங்களில் சுவர்களையே அதிகம் பயன்படுத்துகிறார்கள் போராட்டக்காரர்கள். அப்படிப்பட்ட சுவரோவியங்கள் வரைவதில் புகழ்பெற்றவர் டேவிட் டி லா மனோ என்ற ஸ்பானிஷ் ஓவியர்.

ஸ்பெயினில் உள்ள சலாமன்கா என்ற நகரத்தின் வீதிகளில் இவர் வரைந்த சுவரோவியங்கள் மிகவும் பிரசித்தம் பெற்றவை. இவை பெரும்பாலும் சில்அவுட் அதாவது கருப்பு நிழல் உருவங்கள் கொண்ட ஓவியங்கள் ஆகும். அதிலும் முக்கியமாக மரங்கள், பறவைகள், மனிதர்கள், மனித முகங்கள் ஆகியவையே அதிகம் இடம்பெற்றுள்ளன. ஓவியங்கள் இவற்றின் தொகுதிகளாக கூட்டங்களாக இருப்பது ஓவியத்துக்குத் தனி ஈர்ப்பைக் கொடுக்கிறது.  

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE