ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in
“உங்களால் கற்பனை செய்ய முடிந்த எல்லாமே நிஜமானது” என்பார் ஓவியர் பிகாசோ. அதைப்போல, “மற்றவர்கள் கண்களுக்குத் தெரிவதல்ல நம் உலகம், நம் மனநிலை எப்படியான உலகத்தை உருவாக்குகிறதோ அதுவே நம் உலகம்” என வாழ்ந்தவர் ஓவியர் ரெனி பிராங்கோயிஸ் கிஸ்லைன் மாக்ரித். பெல்ஜியத்தைச் சேர்ந்த இவர் இருபதாம் நூற்றாண்டின் புகழ்மிக்க ஓவியராகக் கொண்டாடப்படுகிறார்.
விசித்திரங்களில், மாயஜாலத்தில் ஆர்வமுள்ளவர்கள் வெகு சிலரே. கற்பனைக்குள் வேறொரு உலகத்தை வாழ்ந்து பார்க்கும் ஆர்வம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஆனால், ஒரே ஒரு முறை ரெனி மாக்ரித்தின் ஓவியத்துக்குள் நீங்கள் புகுந்துவிட்டால் அப்படிப்பட்ட ஒருவராக நீங்கள் மாறிவிடுவீர்கள்.
இவருடைய ஓவியங்கள் பெரும்பாலும் சிந்தனைகளைத் தூண்டுபவை. குறிப்பாக, பார்க்கிற அனைவரையும் குழப்புபவை. அந்தக் குழம்பிய குட்டைக்குள் விழுந்து விஷயத்தைத் தேடுபவர்கள் அடையும் அனுபவத்துக்கு இந்த உலகில் விலையே இல்லை.
ஆனால், இவர் முறையாக ஓவியம் கற்றுக்கொள்ள நினைத்து தோற்றுப் போனார். பிரேசிலில் தன்னுடைய ஓவியங்களைக் கண்காட்சிக்கு வைத்தவர் கடும் ஏளனத்துக்கும் விமர்சனத்துக்கும் ஆளானதால், பாரிஸுக்கு ஓடினார்.