சகலமும் கற்ற சால்வடார் டாலி!

By காமதேனு

ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in

19-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் பிறந்தவர் சால்வடார் டாலி. மாய யதார்த்தவாத ஓவியங்களின் பிரதிநிதியாகவே கருதப்படுபவர் இவர். ஸ்பெயினில் பிறந்த இவர் சிறுவயதிலேயே தூரிகை தூக்கியவர். புத்தகங்கள், காகிதங்கள் என கிடைக்கும் இடத்திலெல்லாம் வரைந்தார் சால்வடார். பெரும் பாலும் கார்ட்டூன் போன்ற ஓவியங்களையே வரைந்தார். 

ஓவியரான குடும்ப நண்பர் ஒருவர்தான் சால்வடாருக்கு வழிகாட்டி. அவரிடம் ஓவியத்தைக் கற்றுக்கொண்டதும், தனது படைப்பாக்க ஆற்றலை வேறு எல்லைகளுக்குக் கொண்டு சென்றார் சால்வடார். பின்னர் மரிஸ்டா அகாடமியில் சேர்ந்து கலை வேலைப்பாடுகளின் நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்தார்.

இவருடைய கலைப் பார்வை சமூகத்தை நோக்கி உந்தித் தள்ளியது. சமூகத்தின் எல்லா பிரச்சினைகளையும் முரண்களையும் ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில் தனது ஓவியங்களை உருவாக்கினார். அவை பெரும்பாலும் மாய யதார்த்தவாத ஓவியங்களாகவே அமைந்தன. ஓவியத்தில் மட்டுமல்ல, சிற்பங்கள் வடிப்பது, கிராஃபிக் கலைகளை உருவாக்குவது, புகைப்படக் கலைஞர்களுக்கு உதவுவது எனப் பல வகைகளிலும் கலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் சால்வடார் .

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE