பேசிக்கிட்டாங்க...

By காமதேனு

விருகம்பாக்கம்

பழைய பேப்பர் கடையில்...
``ஏம்பா! பழைய பேப்பர் என்ன விலைக்கு எடுக்கிற?’’
``இங்கிலீஷ் பேப்பர்னா கிலோ பன்னிரெண்டு ரூபா, தமிழ் பேப்பர்னா கிலோ எட்டு ரூபா!’’
``ஏம்பா! இதுலேயே தமிழ், இங்கிலீஷ்னு ஏற்றத் தாழ்வா? தளபதிக்கிட்ட சொல்லி இதுக்கும்  ஒரு போராட்டம் நடத்துனாதான் சரி வருவீங்க போல?’’
- சென்னை, பி.எம்.ஜெ.சுமையா

விழுப்புரம்

அரசுப் பேருந்தில் நடத்துநரும் பயணியும்...
``கடலூருக்கு 32 ரூபாய் தானே டிக்கெட்... நீங்க 43 கேக்குறீங்க?''
``இது ஸ்பெஷல் வண்டி சார்...”
“ஸ்பெஷல்னா... நீ நூறு ரூபாய் கேட்டாலும் தரணுமா?”
``பிராஞ்ச் மேனஜர் நம்பர் தர்றேன் அவருக்கிட்டயே அதக் கேளுங்க”
``நான் ஏன் கேக்கணும்..? நீயே போன போட்டுக் கேளு. பஸ்ஸ மறிச்சுப் போட்டா போன் போடுவீல்ல...”
``உங்களுக்கு அதுக்கு முழு ரைட்ஸ் இருக்கு. நல்லா மறிச்சுப் போடுங்க... எனக்கும் கொஞ்சம் அலுப்பாத்தான் இருக்கு. அப்டியே ஒரு ரெஸ்ட போட்டுக்கிறேன்”
(பயணி முணுமுணுத்தபடி சைலன்ட் ஆகிறார்)
- செந்துறை, எம்.எஸ்.மதுக்குமார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE