‘அந்நிய’ ஆட்டம்  ஆடும் ஸ்டாலின்!

By காமதேனு

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

ஆசிரியரிடமிருந்து வந்திருந்த அன்றைக்கான பட்டியல் வழக்கம்போல், பாச்சாவிடம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது. அவன் பதறுவதைப் பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பறக்கும் பைக், “எத்தனை நாளைக்கு இப்படி ஆடியோ ஃபங்ஷன்ல அடிவாங்குற தளபதி தம்பிகளாட்டம் தவிச்சிட்டு இருப்ப? ஆனானப்பட்ட நீட் தேர்வுலேயே ஆள்மாறாட்டம் பண்றாங்க. பாச்சாங்கிற பேர்ல யாராவது ஒரு ஆளை அனுப்பினா ஆபத்துகளைத் தவிர்க்கலாமே” என்று அட்வைஸ் சொன்னது. பைக்கின் குரலில் பரிவைவிட பரிகாசமே அதிகம் இருப்பதைப் புரிந்துகொண்ட பாச்சா, ‘ஆனது ஆகட்டும்’ என்று வீறுகொண்டு எழுந்தான்.
ஆனாலும், பட்டியலில் இருந்த ஒரு பெயரை மீண்டும் பார்த்ததும் முடிவை மாற்றிக்கொண்டால் என்ன எனும் மனக்கிலேசம் எட்டிப்பார்த்தது. பின்னே, பட்டியலில் பிரேமலதாவும் இருக்கிறார் என்றால் கொஞ்சம் பீதி வந்துபோகுமா இல்லையா? “சரி, இதுவும் ‘விதி’தான்” என்று அலுத்துக்கொண்டே ஆகாயப் பிரயாணத்தை ஆரம்பித்தான்.

முதலில் அறிவாலயம்.

அங்கிருந்த ஆளுயரக் கண்ணாடி முன் நின்று, ஆவேசமாகப் பேசுவது, அடுத்த நொடியே அமரிக்கையாகக் கைகட்டிப் புன்னகைப்பது என்று ‘அந்நிய’ ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார் மு.க.ஸ்டாலின்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE