ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in
வரலாற்றில் மாவீரர்கள் பல்வேறு காலகட்டங்களில் உலகின் பல மூலைகளில் தோன்றியிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் பேசப்படும் மாவீரர்கள் வெகு சிலரே. அவர்களில் முக்கியமானவர் நெப்போலியன் போனபர்ட்.
17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நெப்போலியன் போனபர்ட் பிரான்ஸ் வரலாற்றில் என்றென்றும் மறக்க முடியாத புகழை அடைந்தார். ஆயுதப்படையில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த சாதாரண வீரராக இருந்த நெப்போலியன், பிரெஞ்ச் புரட்சியின் தளபதியாக மாறி, நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றினார். அதுமட்டுமல்லாமல் சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளையும் படையெடுத்து வென்று ஆட்சி புரிந்தார்.
அத்தகைய நெப்போலியனின் வீரத்தை ஒரே ஒரு ஓவியத்தில் பதிவு செய்தார் ஜாக்குவஸ் லூயிஸ் டேவிட். ‘Napoleon Crossing the Alps’ என்பதுதான் அந்த ஓவியம். பிரான்ஸில் தனது ஆட்சியை நிலைநிறுத்திய பிறகு இத்தாலி மீது படையெடுக்க நெப்பொலியன் முடிவு செய்தார். அந்தப் படையெடுப்பின் போது ஆல்ப்ஸ் மலையைக் கடக்க தனது படையை வழிநடத்திச் செல்லும் காட்சியைத்தான் இந்த ஓவியம் பேசுகிறது.