அகண்ட ஆந்திரத்தின் ஆளுநர்

By காமதேனு

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

ஆசிரியரிடமிருந்து அன்றைக்கான அன்றாடப் பட்டியல் வாட்ஸ்-அப்பில் வந்தபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பாச்சா, ஏதோ துர்சொப்பனம் கண்டு திடுக்கிட்டு எழுந்தான். பட்டியலைப் பார்த்ததும் பதற்றம் மேலும் அதிகரிக்க, படுக்கையறைக்கும் பாத்ரூமுக்குமாக மாறி மாறி அலைந்துகொண்டிருந்தான். வெஸ்டர்ன் டாய்லட்டில் அமர்ந்தபடியே விவேகமாகச் சிந்தித்தவன், உறுதியான முடிவெடுத்து துணிச்சலாக - தூங்கச் சென்றுவிட்டான். ஆசிரியர் போனிலேயே அழைத்து ‘அறிவுறுத்திய’ பின்னர், வேறு வழியில்லாமல் வெளியே வந்தான்.

“வாப்பா பாச்சா. என்ன வரும்போதே வாட்டமா இருக்கே?” என்று  'உச்’ கொட்டி வரவேற்றது பறக்கும் பைக். “லக்கி லூக் காமிக்ஸ்ல வர்ற ஜாலி ஜம்பர் குதிரை மாதிரி கலாய்க்கிறதுல தேர்ந்துட்ட” என்று சொல்லியவாறே அன்றைய பயணத்தைத் தொடங்கினான் பாச்சா.

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரை மீண்டும் சந்திக்க வேண்டிய கட்டாயத்தைச் சொன்னது பட்டியல். நொச்சிக்குப்பம் மீன் மார்க்கெட்டில் தொப்பி, செயற்கை மரு சகிதம் மாறுவேடத்தில் மீன் வாங்கிக்கொண்டிருந்த ஜெயக்குமாரைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்டான் பாச்சா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE