பேசிக்கிட்டாங்க

By காமதேனு

சீர்காழி 

பெட்ரோல் பங்கில் கஸ்டமரும் பெட்ரோல் போடுபவரும்...
``பெட்ரோல் போடும்போது தலையில இருக்கற ஹெல்மெட்டை கழற்றினா என்ன சார்...''
``ஏன் நான் ஹெல்மெட்டை கழற்றலேன்னா டேங்க்ல பெட்ரோல் பில் பண்ணும்போது ஃபயர் ஆயிடுமா?''
``அதுக்கு சொல்லலேங்க... பத்துப் பதினைந்து கஸ்டமர் நூறு, ஐம்பதுன்னு எனக்கு பாக்கி வெச்சிருக்காங்க... ஹெல்மெட்டை கழற்றினா முகம் அடையாளம் தெரியும். பழைய பேலன்சை கேட்டு வாங்கிடுவேன்...''
``நானும் டூ வீலருக்கு ரெண்டு டியூ கட்டலே... ஃபைனாஸ்காரன் பார்த்தா வண்டிய தூக்கிடுவான்னு பயந்துதான் என்னோட முகம் தெரியாம  ஹெல்மெட் போட்டிருக்கேன்.. என்னோட சேஃப்டிக்கு இல்லே... புரிஞ்சுதா?!''
(இருவரிடமும் சிரிப்பு)
- சீர்காழி, வி.வெங்கட்

 வடபழனி 

சிக்னல் அருகில் டிராஃபிக் போலீஸாரும் பைக்காரரும்...
``தம்பி... நில்லுங்க..!''
``சார்... ஹெல்மெட் போட்டிருக்கேன், எல்லா பேப்பர்ஸும் கரெக்ட்டா வச்சிருக்கேன்... அப்புறம் என்ன சார்  வேணும்?''
``பின்னால உட்காந்திருக்கிறவர்  ஹெல்மெட் போடலேயே  தம்பி..?''
``அது அவர்கிட்டே கேளுங்க... நானே போய்த்தொலையுதுனு லிஃப்ட் குடுத்தேன், அவ்வளவுதான்!''
``அட... நாங்க ஒரு ரூட்ல வந்தா நீ ஒரு ரூட்ல போறீயாக்கும்? ஓட்டி வந்த பைக்கும் ஓனரும்தான் எங்களுக்கு முக்கியம்.''
``அதானே... உங்களுக்கு ஃபைன் தான் முக்கியம்... நல்லா வருவீங்க சார்!''
- தஞ்சாவூர், பா து பிரகாஷ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE