வீடே...  பாக்க வேணாம்! 

By காமதேனு

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

‘ஒரு ஹெல்ப் வேணும்... ப்ளீஸ் கால் மீ'னு பாஸ்கிட்ட இருந்து வந்த மெசேஜைப் பார்த்ததும் எனக்கு ஒண்ணும் புரியல. “லீவுல இருக்கவருக்கு என்ன வேணும்?”னு யோசிச்சுக்கிட்டே போன் பண்ணுனா லைனை கட் பண்ணுனாரு. ‘எதா இருந்தாலும் மெசேஜ் பண்ணு'ன்னு அடுத்த மெசேஜ்!

‘என்ன பாஸ் வேணும்?' னு மேசேஜ்ல கேட்டேன். ‘என்னோட ரிலேட்டிவ் ஒருத்தரு இங்க டிரான்ஸ்ஃபர் ஆகி வர்றாரு. அவருக்கு ஒரு வீடு பாக்கணும்'னு பதில் போட்டாரு. ‘ஓகே பாத்துட்டா போச்சு... ரொம்ப அவசரமா? இப்பவே பர்மிஷன் போட்டுக் கிளம்பி போகட்டுமா?'ன்னு கேட்டேன். அதுக்கு ரொம்ப உஷாரா, ‘ஒண்ணும் வேணாம்... ஈவ்னிங் நிதானமா போய்ப் பார்த்தா போதும்'னு பதில் போட்டாரு.

வீட்டுல போய் விஷயத்தைச் சொன்னேன். நல்லாவே பாட்டு விழுந்துச்சு. “நானெல்லாம் ஒரு வேலை சொன்னா முனகுவீங்க...”னு ஆரம்பிச்சாங்க. வழக்கப் போல காதுல விழாத மாதிரியே வீடு பார்க்க கெளம்பிட்டேன். கெளம்புன பின்னாடித்தான் ஏகப்பட்ட டவுட் வந்துச்சு. அபார்ட்மென்ட்டா... தனி வீடா... என்ன வாடகைல வேணும்? எதுவுமே விசாரிச்சுக்கலியேனுட்டு மறுபடியும் டீட்டெய்ல் கேட்டு ஒரு மெசேஜைத் தட்டுனேன். அரை மணி நேரம் கழிச்சு அதுக்கு ஒரு பதில் வந்துச்சு. ‘ரெண்டு டைப்பும் பாரு. அவங்க வந்து பாத்துட்டு பிடிச்சத வெச்சிக்கட்டும்.'

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE