முப்படைகளின் முதல்வர் அன்புமணி!

By காமதேனு

ஜாசன்
jasonja993@gmail.com

பறவைகளுக்கு நடுவே பறந்து சென்று செய்தி சேகரிக்கும் பாச்சாவின் புகழ் ஊரெங்கும் பரவிவிட்டது. எங்கு சென்றாலும் அடிதான். சரி, பொது வாழ்க்கையில் இதெல்லாம் ஜகஜம்தானே என்று பொறுத்துக்கொண்டு பணி செய்துகொண்டிருக்கிறான். இதோ இன்றைக்கு ஆசிரியர் கொடுத்த பட்டியலை எடுத்துப் படித்தாலே அடிவயிறு கலங்குகிறது. ஆனது ஆகட்டும் என்று ஆகாய பைக் மீது ஆரோகணித்து (வார்த்தை உபயம்: ராஜேஷ்குமார்) பறக்கத் தொடங்கினான். பட்டியலின்படி முதலாமவர், முதல்வர் கனவில் மீண்டும் மிதக்கத் தொடங்கியிருக்கும் அன்புமணி.

‘அன்புமணி தம்பிகள் படை’, ‘அன்புமணி தங்கைகள் படை’,   ‘அன்புமணி மக்கள் படை’ என்று அடுத்தடுத்து உருவாக்கிக்கொண்டிருக்கும் படைகளுக்குச் சீருடை எடுக்க எந்தக் கடைக்குச் செல்வது எனும் யோசனையில் மூழ்கியிருந்தார் அன்புமணி. ‘சரி சீருடை கிடைச்சுட்டாலும் அதுக்குத்தக்கன ஆள் வேற வேணுமே’ என்று அடுத்த யோசனை அட்டாக் செய்ய, ஏதோ பிரஸ் மீட்டில் தனியாக மாட்டிக்கொண்டதைப்போல் பீதியடைந்து நின்றார். அவர் அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் நேரமும் பாச்சா உள்ளே நுழையும் நேரமும் ஒன்றாக இருந்தன.

சுதாரித்துக்கொண்ட அன்புமணி, “வாங்க… நீங்கதான் அந்த பாச்சாவா?” என்று அன்பாகவே வரவேற்றார். “வணக்கம் சார். இப்பதான் உங்களை முதமுறையா சந்திக்கிறேன்” என்று ஆவலோடு அறிமுகம் மலர்ந்த பாச்சா, அடுத்த நொடியே ‘வேலை’யைத் தொடங்கினான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE