பவர் சாமி... பலிக்குமா சாமி? 

By காமதேனு

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

நிஜமாவே நம்ப முடியல. கடை வீதிக்குப் போயிட்டு திரும்பும்போதுதான் அவரைப் பார்த்தேன். குண்டா குட்டையா காவி வேட்டியில என்னையவே உத்துப் பார்த்தாரு. என்னோட ரெண்டு கையிலயும் பை... அது நிறைய சாமான். தூக்க முடியாம திணறிக்கிட்டு வர்றப்ப இந்தாளு எதுக்கு கேட் போடுறாரு.

திடீர்னு, “உனக்கு என்ன வேணும் கேளு...”ன்னாரு. என்னோட டூ வீலர் ஏற்கெனவே ரிசர்வுக்கு வந்துருச்சு. அதுலயே ஓட்டி இன்னிக்கு சுத்தமா காலி. வீட்டுல, “கடைக்குப் போ”ன்னு விரட்டுனதுல பொடி நடையா வந்தாச்சு. இப்போ முக்கா கிலோ மீட்டர் வீட்டுக்கு நடக்கணும். ரெண்டு லிட்டர் பெட்ரோல் வேணும்னு கேட்டுப் பார்க்கலாமான்னு குசும்பா தோணுச்சு. அடக்கிக்கிட்டேன்.
என் பேரை கரைக்டா சொன்ன அவரு, “தம்பி... வெளையாட்டு இல்ல. என் கிட்ட பவர் இருக்கு. உனக்கு வேண்டியத கேளு”ன்னு பவர் ஸ்டார் மாதிரி முழிச்சாரு. நிஜமாவே பவர் சாமியாரா... இல்ல, உட்டாலங்கடியான்னு புரியாம முழிச்சப்போ சிரிச்சாரு. “என்னைத் தெரியலியா தம்பி... உன் கல்யாணத்துக்கு வந்தேனே”ன்னு பல வருஷத்துக்கு முந்தின அந்த சோகக் கதையைச் சொன்னார். “உன் பொண்டாட்டிக்கு ஒரு வகையில நான் தாய் மாமனாக்கும்.”

உறவ சொல்லி ஒரு பையைக் கையில் வாங்கிட்டாரு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE