அணையைத் திறந்துட்டு அப்பச்சி மேல பாய்ஞ்சிட்டீங்களே..!

By காமதேனு

ஜாசன்
jasonja993@gmail.com

பாச்சாவுக்கு மட்டும் தனியாக ஊரடங்கு உத்தரவு போட்டு, அரசியல் களத்தில் அவனது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியிருந்த அகில இந்தியத் தலைவர்கள், ஆசிரியரின் இடைவிடாத வேண்டுகோள்களுக்குப் பின்னர் ஒருவழியாக இறங்கிவந்தனர். ‘பாச்சா கேள்வி கேட்கட்டும். ஆனால், பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கேட்கப்படாது. அது அவனது உடம்புக்குச் சேராது’ என்று நிபந்தனையையும் விதித்தனர். பாச்சாவைத் தன் அறைக்குக் கூப்பிட்டு, இத்தனையையும் எடுத்தியம்பி அனுப்பிவைத்தார் ஆசிரியர்.

பாச்சாவும் பதவிசான பையனாகக் கேட்டுக்கொண்டு பறக்கும் பைக்கில் ஏறினான். கொஞ்ச தூரம்தான் போயிருப்பான். திடீரென்று எங்கிருந்தோ ஒரு உலோகக் குரல் ஒலித்தது. “ஏம்ப்பா பாச்சா, இப்படிப் பயந்தாங்கொள்ளி பாச்சாவா இருக்கிறியே… அரசியல் தலைவர்கள்கிட்ட இனிமே அடக்கி வாசிக்கப்போறியா?” என்று அந்தக் குரல் கேட்டதும் திடுக்கிட்டு பிரேக்கிட்டான் பாச்சா. பேசியது பறக்கும் பைக்தான். வண்டியில் அதிநவீன அலெக்ஸாவும் பொருத்தப்பட்டிருப்பதை அப்போதுதான் அப்பாவி பாச்சா அறிந்துகொண்டான்.

சரி, ‘பேச்சுத் துணைக்கு ஆச்சு’ என்று நிம்மதியடைந்தவன், “நானாவது பயப்படுறதாவது… ஆசிரியர் சொன்னாரேன்னு சும்மா தலையாட்டினேன். எங்க குடும்பமே நாரதரோட நேரடி வம்சமாக்கும். இந்திரலோகத்துல இதுக்கான ரெக்கார்ட்ஸே இருக்கு” என்றான். “அது சரி. நீ சொல்ற, நான் நம்புறேன். கடைசியில அலாவுதீன் பூதம் மாதிரி என்னை ஆக்கிட்டே” என்று அலுத்துக்கொண்டது பறக்கும் பைக். இருவரும் பேசிக்கொண்டே சத்தியமூர்த்தி பவனை அடைந்தனர். அங்கே ஒரே கூட்டம். தொண்டர்களைவிட துப்பாக்கி ஏந்திய காவலர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்தது. வைகோ ஆதரவாளர்களிடமிருந்து கதர்ச்சட்டைக்காரர்களைக் காப்பாற்ற வந்திருந்த படை அது. ‘கடலை வியாபாரி காட்டுல இன்னிக்கு மழைதான்’ என்று நினைத்துக்கொண்டே பைக்கை பார்க் செய்தான் பாச்சா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE