நீலகிரி அருகே பந்திப்பூரில் பாறை மீது ஓய்வெடுத்த புலி குடும்பம்!

By ஆர்.டி.சிவசங்கர்

முதுமலை: பந்திப்பூரில் புலி தனது குட்டிகளுடன் பாறை மீது ஓய்வெடுத்த காட்சி சுற்றுலா பயணிகளை பரவசப்படுத்தியது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி கர்நாடகா பந்திப்பூர் புலிகள் காப்பகம் உள்ளது. பந்திப்பூரில் கோடை மழையை தொடர்ந்து, வனப்பகுதி பசுமைக்கு மாறியுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணியர் அவ்வப்போது புலிகளை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

பந்திப்பூர் வனத்தில் பாறையின் மீது நான்கு குட்டிகளுடன் தாய்புலியும், நீரோடை அருகே புலி ஒன்று உறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததை அங்கு வந்த சுற்றுலா பயணியர், வன ஊழியர்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

யானை தவித்துக் கொண்டிருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில் பந்தலூர் கொலப் பள்ளி பகுதியில் 30 அடி கிணற்றில் விழுந்தால் யானை குட்டியை வனத்துடன் மீட்டனர்.

அந்தக் குட்டி யானை தனது தாயுடன் இணைந்ததை வனத் துறையினர் ட்ரோன் மூலம் படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோவை அனைத்துமே பகிர்ந்துள்ளனர் சுவாரஸ்யமான இந்த வீடியோவை சுற்றுலா பயணிகள் பலர் பார்த்து மகிழ்ந்தனர்.

சமீப காலமாக கூடலுார், பந்தலுார் பகுதிகளில் வனவிலங்குகளின் சுவாரஸ்ய காட்சிகளை காண வாய்ப்பு கிடைப்பதால், சுற்றுலா பயணிகள் பரவசம் அடைந்து உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE