பேசிக்கிட்டாங்க...

By காமதேனு

நாகர்கோவில்

கோட்டார் பகுதியில் இருவர்...
``அண்ணே...சாக்கு தைக்குற கடை எங்க இருக்கு?''
``நேரா போனீனா... ஒரு சின்னக் கோயில் இருக்கும். அத தாண்டி `ஸ்கூல்' ஒண்ணு இருக்கும், அப்படியே `ரைட்' எடுத்து `லெஃப்ட்' எடுத்தா சந்து ஒண்ணு வரும், அப்படியே உள்ள போனால் கடை வரும்...''
``ஒரே குழப்பமா இருக்கே... வேற அடையாளம் சொல்லுங்களேன்...''
``வேற அடையாளமா...? `டாஸ்மாக்' கடையில் இருந்து எட்டாவது கடை.''
``ஓ... இத முதல்லே சொல்ல வேண்டியதுதானே...?''
``சரி விடுப்பா... நான்தான் நல்ல ஆளுன்னு நெனச்சு நல்ல இடத்த அடையாளம் சொல்லி உன்னைக் குழப்பிட்டேன். என்னை மன்னிச்சிக்கோ...''
``அப்படி இல்லீங்கண்ணா... அந்த ஒரு இடத்துலதான் ஜேஜேனு ஸ்கூட்டரும் காருமா நிறுத்திக் கிடக்கும். கேட்டலும் சட்டுனு அடையாளம் சொல்லுவாங்க. அதுக்கு சொன்னேன்...''
- பனங்கொட்டான் விளை, 
மகேஷ் அப்பாசுவாமி

தஞ்சாவூர்

பெரிய கோயில் அருகே இருவர்...
``உலகக் கோப்பையை விட்டுட்டாய்ங்க! என்ன இருந்தாலும் மோடியும், அமித் ஷா வும், இந்த மாதிரி பண்ணியிருக்கக் கூடாது!''
``அட பஞ்சரான பன்னாடையே... மோடியும் அமித் ஷா வும் இங்கே எங்கேய்யா வந்தாங்க?''
``அடப் போய்யா! டோனியை ரன் அவுட் ஆக வெச்சு, அவர் மேல பழியைப் போட்டா, ரிட்டையர்டு ஆயிடுவார்... உடனே பிஜேபி-யிலே சேர்த்திடலாம்! அவங்க ஊருக்கு முதல்வர் வேட்பாளரா நிறுத்தி ஜெயிக்கப் பார்க்கலாம். இவங்க ஐடியாவெல்லாம் தெரியாதா என்ன?''
``டோனி ரிட்டையர்டும் ஆக மாட்டார்! பிஜேபி-யிலயும் சேர மாட்டார்! வேலையைப் பாருடா வெங்காயம்! இப்படித்தான் ஓட்டை டவுசர்ல கையை விட்டுக்கிட்டு, ஓவரா யோசிக்கிறது...''
தஞ்சாவூர், தே.ராஜாசிங்ஜெயக்குமார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE