இரவு வேட்டை

By காமதேனு

ஜெ.சரவணன்

இயற்கையைவிட சிறந்த ஆசிரியர் இல்லை என்பதை முழுமையாக நம்புபவர் பிரெஞ்ச் ஓவியர் ஜீன் பிராங்கோயிஸ் மில்லெட். கிராமப்புற விவசாய வாழ்க்கையை ஒவியமாக வரைந்தவர்களில் மில்லெட் முக்கியமானவர். பிரான்ஸின் கிராமப்புற மனிதர்களையும் இயற்கைக் காட்சிகளையும் யதார்த்த பாணியில் வரைந்திருக்கிறார், இவரது ஒவியங்களில் வான்கோவின் பாதிப்புகளைக் காணமுடிவதாகச் சொல்கிறார்கள் ஓவிய ஆராய்ச்சியாளர்கள். 

பல முக்கியமான ஓவியங்களை வரைந்த இவருடைய பிரமிக்க வைக்கும் ஓவியம் ‘Hunting Birds at Night’. இந்த ஓவியத்தில் விவசாயிகள் இரவில் மரங்களில் இருக்கும் புறாக்களைத் தீப்பந்தங்களைக் கொண்டு வேட்டையாடும் காட்சியைச் சித்தரிக்கிறார். இதை வழக்கமான ஒவிய பாணியில் இருந்து விலகி சர்ரியலிச ஒவியம் போல வரைந்திருக்கிறார் மில்லெட்.

ஓவியத்தில் நான்கு விவசாயிகள் உள்ளனர். அவர்கள் தங்கள் கையில் உள்ள தடியைக் கொண்டு மரங்களில் இருக்கும் பறவைகளை அடித்து வீழ்த்த முயல்கிறார்கள். ஆனால், அவர்களின் முகங்கள் பயத்தில் வெளிறிப்போய் இருக்கின்றன. அவர்கள் கையிலிருக்கும் தீப்பந்தத்தின் நெருப்பு வெளிச்சத்தில் பறவைகள் திசை தெரியாமல் நாலாபக்கமும் தடுமாறி சிதறிப் பறக்கின்றன, ஒரு பறவை சிறகொடிந்து தரையில் வீழ்ந்து துடிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE