டெல்லி சலோ..!

By காமதேனு

ரிஷபன்

சில பேரு எந்த வேலையையும் குறி பார்த்து தப்பாவே செய்வாங்க. எனக்கு வாய்ச்ச உறவுகள் சிலர் அப்படித்தான். ஆசை ஆசையா ஒரு டூர் போகலாம்னு பேசிக்கிட்டிருந்தோம். என்னோட கெட்ட நேரம்... அப்ப பாத்து உறவுக்காரர் ஒருத்தர் குடும்ப சகிதமா எங்க வீட்டுக்கு வந்திருந்தார்.

நாங்க டூர்னு ஆரம்பிச்சதுமே, “போன வெக்கேஷன் லீவுல அங்கே போனோம்... இங்கே போனோம்”னு டேப்பே இல்லாம அளந்துச்சு அந்த மனுசன். அத கேட்டுட்டு, ‘எனக்கும்தான் ஒண்ணு வாய்ச்சிருக்கே’ன்ற மாதிரி என்னைப் பாத்து எங்க வீட்டம்மா மொறைச்சாங்க. “எப்ப பாரு இவருக்கு ஆபீஸ்தான்... எங்க கூப்டாலும் வர மாட்டார்”னு அவங்க சொன்னதும் உறவுக்காரர் நைசா, “ ஏம்பா... வருசத்துக்கு இத்தன நாள்னு லீவு குடுக்குறாங்களே... அவிங்களே தரதுதானே... அந்த லீவ எடுத்துட்டு ஜாலியா எங்கயாச்சும் போயிட்டு வரவேண்டித்தானே”ன்னாரு.

இது பத்தாதா நம்ம மனுஷிக்கி, “நல்லாக் கேளுங்க. நாங்க கேட்டா நெஞ்ச நிமித்திக்கிட்டு எல்லைல சண்டைக்குப் போறவர் மாதிரி வசனம் பேசுவாரு”ன்னாங்க.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE