அப்பா... அப்பப்பா!

By காமதேனு

ரிஷபன்

சில நேரம் நம்ம ஒண்ணு நெனச்சா அது ஒண்ணு நடக்கும். அது எனக்கும் அடிக்கடி நடக்கும். இப்புடித்தான் ஒரு நாளு என் ஃப்ரெண்டு வேணு போன்ல வந்தான். இவன் எதுக்கு இந்த நேரத்துலனு போனை எடுத்தா... அவன் குரல்ல ஒரு பதற்றம்.  “நண்பா... உன் உதவி தேவை” எனக்கு ஒரு நிமிஷம் பக்குனுச்சு. “சுந்தரியோட அம்மா கீழ விழுந்துட்டாங்களாம். அவசரமா அவங்களப் பார்க்கப் போறோம். எங்கப்பாவ தனியா விட்டுட்டுப் போக முடியாது. ஒரே ஒரு நாளைக்கு மட்டும் அவர உங்க வீட்டுல வச்சுக்கிறியா..?’னு கெஞ்சுனான். எம் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டான்னு ஜனகராஜ் மாதிரி ஹேப்பியா இருந்தவனுக்கு இப்படியா ஒரு சோதனை வரணும். நான் தயங்குறத பார்த்துட்டு, மறுபடியும் “ப்ளீஸ்டா...”ன்னான்.

அவனோட அப்பா அவர் வேலைய அவரே பார்த்துப்பார். புக் படிப்பார். டிவி பார்ப்பார். நல்லாவே அரட்டையும் அடிப்பாரு. இதுல நமக்கு என்ன கஷ்டம்னு சம்மதிச்சேன். “இப்போ ஆட்டோல ஏத்தி அனுப்பிடறேன். வந்துட்டார்னு ஒரு மெசேஜ் பண்ணு. போதும்”னு அவன் சொன்னப்ப ராத்திரி மணி பத்தரை.  ஆனா, பதினொன்றரை வரைக்கும் ஆளைக் காணோம். வேணு நம்பரை அடிச்சா நாட் ரீச்சபிள்.  கீழ இறங்கி வாட்ச்மேனைத் தேடுனா... இருக்கையில உக்காந்துக்கிட்டே கூட்ஸ் ஓட்டுறாரு; அப்படியொரு அனந்த சயனம். வாசல் கேட் பூட்டியிருக்கு.

  ‘அய்யா... சாமி... எந்திரி’ன்னு பாட்டுப் பாடாத குறையா அவரை எழுப்புனா, அரைத் தூக்கத்துல இருந்த அந்த மனுஷன்,  “என்ன ஸார்... மணி அஞ்சரை ஆச்சா... மோட்டார் போடணுமா?”னு அர்த்த ராத்திரியில் ஸ்விட்சைப் போடக் கெளம்பிட்டாரு. மனுசன அப்டியே தடுத்து நிறுத்தி,  “கெஸ்ட் வராங்க. கதவைத் திறப்பா”னு  சொன்னேன். சாவியை என் கையில குடுத்தவரு, “ பூட்டிட்டு சாவியை என் பையில் போட்டுருங்க ஸார்”னு சொல்லிட்டு கொறட்டைய கன்டினியூ பண்ணிட்டாரு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE