ஜூடித் செய்த கொலை!

By காமதேனு

ஜெ.சரவணன்

பெண்கள் எப்போது எந்த அவதாரம் எடுப்பார்கள் என்றே தெரியாது. இது புராண கதைகள் தொட்டு இன்றுவரையிலும் அப்படியேதான் இருக்கிறது.

கத்தோலிக்க தேவாலயங்களால் எழுதப்பட்ட புராண கதைகளில் ஜூடித் என்ற விதவைப் பெண் தன் நகரத்து மக்களைக் காப்பதற்காக ஒரு கொலை செய்கிறாள். புராண கதைகளின் நிகழ்வுகளை ஓவியமாக வரைவதில் ஆர்வமுடையவராக இருந்த புகழ்பெற்ற ஓவியர் கரவாகியோ, இந்த நிகழ்வையும் ஓவியமாக வரைந்தார். இந்த ஓவியத்தின் பெயர் ஹோலோஃபெர்னஸ் தலையைத் துண்டிக்கும் ஜூடித் (Judith Beheading Holofernes).

சிரியாவின் போர்த்தளபதி ஹோலோஃபெர்னஸ், பெதுலியா என்ற நகரத்தை முற்றுகையிட்டு ஆக்கிரமிக்கிறான். அந்த நகரத்தைப் பாதுகாத்து வந்த ஜூடித் என்ற பெண், பெதுலியாவிடமிருந்து நகர மக்களைக் காப்பாற்ற அவனைத் தன் அழகால் மயக்குகிறாள். அவன் அவளிடம் மயங்கியிருந்த தருணத்தில் அவனது தலையைத் தன் வாளால் வெட்டி துண்டிக்கிறாள். இவ்வாறு தன் நகரத்தைக் காப்பாற்ற அவள் தன்னையே பணயமாக வைக்கிறாள். இந்த நிகழ்வை கரவாகியோ ஓவியமாக வரைகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE