அப்புறமா கதை மாறும்!

By காமதேனு

நேத்து வரைக்கும்
அடிதடிங்க...
இனி நாங்க
அண்ணன் தம்பிங்க..!
குடிசை தேடி அலைவோமுங்க...
கூழு இருக்கானு சிரிப்போமுங்க..!
மூக்கு ஒழுகும்
மழலை கண்டால்
பாசம் ஒழுக பார்ப்போமுங்க...
கொள்கைன்னு ஒண்ணு இருந்தா
குப்பையோட சேர்ப்போமுங்க..!
கூட்டாளிக்கும் கொடியை ஏந்தி
கூவி ஓட்டு கேப்போமுங்க...
அக்கா தங்கை காலில் விழ
போட்டிபோட்டு நிப்போமுங்க..!
ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு
போக்குவரத்தை சரிசெய்வோமுங்க...
போலீஸைக் கண்டா
வந்தனம் போட்டு
வழிவோமுங்க..!
இந்தக் கூத்து எல்லாமே 
ஓட்டு வாங்கும் வரைதாங்க...
அப்புறமா கதை மாறும்
இதெல்லாமே ஒரு சீசனுங்க..!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE