சூரியனைப் பிடிக்க ஆசைப்பட்ட இகாரஸ்!

By காமதேனு

ஜெ.சரவணன்

பீட்டர் ப்ரூகல் தி எல்டர் என்ற புகழ்பெற்ற டட்ச் ஓவியர் வரைந்த மகத்தான ஓவியங்களில் ஒன்று ‘Landscape with the Fall of Icarus’ ஓவியம். 1558-ல் வரையப்பட்ட இந்த ஓவியம், இன்றைக்கும் ஓவியப் பிரியர்களின், ஓவியக் கலைஞர்களின் பிரமிப்புகளில் ஒன்றாக இருக்கிறது.

பெரும்பாலும் ப்ரூகல் இதிகாசங்கள், கதைகள் மற்றும் கவிதைகள் ஆகியவற்றின் காட்சிகளை ஓவியமாக வரைவதை வழக்கமாக வைத்திருந்தார். அவருடைய ஓவியங்கள் ஒவ்வொன்றுமே ஒரு கதை சொல்லும். இந்த ஓவியமும் அப்படித்தான்.

கிரேக்க இதிகாசத்தில் இகாரஸ் என்று ஒரு பலசாலி இருந்தான். அவனுக்கு வானத்தில் பறக்க வேண்டுமென்று ஒரு ஆசை. தன்னுடைய ஆசையை தன் தந்தையிடம் கூறி, தான் பறந்தே ஆக வேண்டும் என்று அடம்பிடித்தான். இறுதியில் அவனுடைய தந்தையும் அவனுக்கு பறப்பதற்கு செயற்கையாக றெக்கைகளைத் தயார் செய்துகொடுத்தார். அதை தேன் மெழுகு கொண்டு தன் முதுகில் ஒட்டிக் கொண்டு வானில் பறக்க முயற்சி செய்தான். வானில் பறக்க முடிந்தது. இகாரஸுக்கு ஒரே சந்தோஷம். ஆனால், பறக்கும் ஆசை பேராசையாக மாறியது. சூரியனிடம் பறந்து செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தான். தந்தை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. சூரியனுக்கு அருகில் பறந்து சென்றான். சூரிய வெப்பத்தில் மெழுகு உருகி, றெக்கை உடைய, கீழே கடலில் விழுந்தான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE