நட்பைப் பேசும் ஓவியம்!

By காமதேனு

ஜெ.சரவணன்

ஓவிய வரலாற்றில் ‘Expressionism' என்ற ஓவிய முறையை அறிமுகப்படுத்தியவர் வின்சென்ட் வான் கோ. அவர் வரைந்த கடைசி ஓவியம் இது. அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துபோவதற்கு சில வாரங்கள் முன்பு வரைந்தது இந்த ஓவியம். அதுமட்டுமல்லாமல் அவர் வரைந்த ஓவியங்களில் புகழ்பெற்ற சில ஓவியங்களில் ‘Portrait of Dr. Gachet’ என்ற இந்த ஓவியமும் ஒன்று.

மருத்துவர் காஷெட், கலைஞர்களுடன் நேரத்தில் கழிப்பதில் மிகவும் ஆர்வமிக்கவர். அவருக்கு வின்சென்ட் வான் கோ ஓவியங்கள் மீது கொள்ளை காதல். வின்சென்ட் வான் கோ தனது இறுதி ஆண்டுகளில் மன நலம் பாதிக்கப்பட்டு மனநல காப்பகத்தில் இருந்தார். அங்கிருந்து வெளியே வந்த அவரை அவரது சகோதரர் மருத்துவர் காஷெட்டிடம் அனுப்பினார். ஒரு ஆண்டுக்கும் மேலாக காஷெட்டுடனேயே தங்கியிருந்தார் வான்கோ.

அவர் காஷெட்டுடன் தங்க ஆரம்பித்த சில நாட்களிலேயே தனது சகோதரருக்கு கடிதம் எழுதினார். “இவர் என்னை குணப்படுத்துவார் என்று தோன்றவில்லை. என்னைவிட பெரிய நோயாளியாக இருக்கிறார்” என்று கூறி எழுதியிருந்தார். ஆனால், போகப்போக இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக ஆனார்கள். பின்னர் சகோதரிக்கு அவர் எழுதிய கடிதத்தில், “எனக்கு நெருக்கமான ஒரு சகோதரர் கிடைத்துவிட்டதாகவே உணர்கிறேன்” என்று எழுதியிருந்தார். அந்த அளவுக்கு இருவரும் ஒருவர் மற்றவருடைய பிம்பமாகவே மாறியிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE