குப்பைக்கு நான் கியாரன்டி!

By காமதேனு

ரிஷபன்

எல்லாரும் இப்ப பிளாஸ்டிக் தடையைப் பத்தி பேசிட்டு இருக்காங்க. ஆனா, இந்த மக்கும் குப்பை, மக்காத குப்பை சேகரிக்கிற விஷயத்துல நான் மக்கா போய் மாட்டிக்கிட்ட கதை இது.

“சீனு ஸார்... சீனு ஸார்” தரைத் தளத்துலருந்து எங்க ஃபிளாட்டோட செகரட்டரி பாஸ்கரன் சத்தம் போட்டுக் கூப்பிட்டாரு. எட்டிப் பார்த்தேன். அவருக்குப் பக்கத்துல இன்னும் ரெண்டு பேரு .லிஃப்ட் இல்லாததால 47 படிகளையும் எண்ணாமலே வேகமா இறங்கி கீழ வந்தேன்.

“கார்ப்பரேஷன்லருந்து வந்திருக்காங்க... குப்பையைப் பத்தி பேசணுமாம்” என்றார் பாஸ்கரன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE