அந்த ஆவியாத்தா எங்கம்மா இல்லை!- கா.சு.வேலாயுதன்

By காமதேனு

ஒரு ஆவியாத்தா ‘மகிமையை’ பத்திரிகையில செய்தியாக எழுதி, ‘அந்த ஆவியாத்தா எங்க அம்மா இல்லை’ன்னு மறுப்பு அறிக்கை வந்த கதையை எங்காச்சும் கேள்விப்பட்டிருக்கீங்களா? பத்து வருசம் முன்னால எனக்கு அந்த அனுபவம் ஏற்பட்டுச்சு!

எனது வக்கீல் நண்பர் சி.ஞானபாரதி ஒரு நாளு எனக்கு போன்போட்டு, “ஒரு பேய் ஸ்டோரி இருக்கு. சம்பந்தப்பட்டவர் என் முன்னாடிதான் இருக்கார். வந்தா சூப்பர் செய்தி அடிக்கலாம்” என்றார். அடுத்த சில நிமிடங்கள்ல அவரோட ஜாகையில இருந்தேன். அங்கே,  ‘பேய பார்க்க வேண்டாம்; என்னைப் பார்த்தாலே போதும்’ங்கிறாப்பல, ஒரு நடுத்தர வயசு மனுசன் நடுக்கத்தோட உட்கார்ந்திருந்தாரு.

 “இவருதான் நான் சொன்ன ஆள்!” என்று அவரை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர்,  “அய்யா எங்கிட்ட சொன்ன உங்க ஊர்க் கதையை இவர்கிட்ட சொல்லுங்க. பேப்பர்காரர்; செய்தி போடுவார்!”  சொன்னதுதான் தாமதம். “அய்யய்யோ சாமி, சாமி. இதைப் பேப்பர்ல போட்டீங்க. நான் தொலைஞ்சேன். அந்த பேய விட எங்கூருக் காரங்க என்னை புடிச்சுக்குவாங்க” என்று பதறினார் அந்த ஆள்.

வேப்பிலை அடிக்காமலேயே அவருக்குக் கொஞ்சம் மகுடி வாசித்துப் பேசவைத்தோம்.  அவரு சொன்ன பேய்க்கதை இதுதான்: கோயமுத்தூர் பேரூர் பக்கமுள்ள காலனியில ஒரு அமாவாசை அன்னைக்கு  வேன் மோதி அறுபது வயசு ஆத்தா ஒருத்தி ஸ்பாட் அவுட் ஆயிருக்கா. அன்னிக்கு கோயில் திருவிழா வேற. அதனால பிணத்தை சட்டுனு எடுத்து அடக்கம் பண்ணிட்டு, திருவிழாவை நடத்திருக்காங்க. அடுத்த அமாவாசைக்கும் அதே இடத்துல 16 வயசு பையன் ஒருத்தன் லாரி மோதி செத்துட்டான். இதேபோல அடுத்த  அமாவாசைக்கும் ஊருக்குள்ள ஒரு சாவு. இப்படி அடுத்தடுத்து அமாவாசை அன்னிக்கா பார்த்து காவு விழுந்ததால காலனி சனங்க கலவரமாகிட்டாங்க. 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE