ஸ்கூப் தேடிப் போனேன்...  குதிரையேறி வந்தேன்!

By காமதேனு

கா.சு.வேலாயுதன்

“சூப்பரான ஒரு விருந்து. போலாம் வர்றியா?”னு யாராவது கேட்டால், சட்டென  “ம்கூம்... முடியாது” என்று சொல்லும்  நான்,  “ஒரு ஸ்கூப் நியூஸ் இருக்கு” என்று சொன்னால் சோறு, தண்ணிய பத்திக்கூட கவலைப்படாம கேமராவைத் தூக்கிட்டு கிளம்பின காலம் அது!

பதினஞ்சு வருசத்துக்கு முன்னால, ‘‘பொள்ளாச்சி பக்கத்துல மூங்கில் பள்ளம்ங்கிற கிராமத்து ஸ்கூல்ல மலையாளம் படின்னு புள்ளைகளை டார்ச்சர் பண்றாங்க. தமிழ் பேசினா பிரம்படியாம். நாளைக்கு அதை விசாரிக்கப் போறோம். காலையில அஞ்சு மணிக்கு பொள்ளாச்சியில இருந்தா உங்களையும் கூட்டிட்டுப் போறோம். மதியமே திரும்பிடலாம்; வர்றீங்களா?” என வக்கீல் நண்பர் ஒருவர் கேட்க, அடுத்தநாள் பிரம்ம முகூர்த்தத்திலேயே பொள்ளாச்சியில் இருந்தேன்.

கொஞ்சநேரத்துல ஆணும் பெண்ணுமா 15 பேர் ஒரு வேனில் அங்கு வர, அவர்களோடு நானும் தொத்திக்கிட்டேன். அங்க இங்க மைல் கணக்கா சுத்தி கடைசியா கேரள எல்லை சோதனைச் சாவடிக்கு பக்கத்துல ஆத்தங்கரையில வேன் நின்னுச்சு.    “குளிக்கிறவங்க குளிக்கலாம். பல் தேய்க்கறவங்க தேய்க்கலாம்”ன்னு பெருசு ஒருத்தரு குரல் குடுக்கவும். அத்தனை பேரும் ஆத்துல இறங்கி அவங்க அவங்க வேலைய பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அடுத்ததா, கைவசம் கொண்டு வந்திருந்த புளியோதரை, தயிர் சாத பொட்டலங்களை பிரிச்சுச் சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE