கோபக்கார இயக்குநரும்... சேட்டைக்கார குரங்கும்! 

By காமதேனு

கே.கே.மகேஷ்

சமீபத்துல காரைக்குடி பக்கம் ஒரு சினிமா படப்பிடிப்பை வேடிக்கை பாத்தேன். படத்துல காமெடி இருக்குதோ இல்லியோ, படப்பிடிப்பு செம காமெடியா இருந்துச்சி. ஏதோ ஆபத்து. கோயில்ல இருந்து வேகமா வெளியே வர்ற மடோனா செபஸ்டியனை பைக்கில் வேகமா வந்து காப்பாத்தி கூட்டிக்கிட்டுப் போறாரு சூரி  -  இதுதான் காட்சி. அதை எடுத்து முடிக்கிறதுக்குள்ள அந்த டைரக்டரை, ஃப்ரெண்ட்ஸ் படத்து கான்ட்ராக்டர் வடிவேலு மாதிரி ஆக்கிட்டாங்க மொத்த டீமும். 

அந்தக் காட்சி எடுக்கிறப்ப, கோயிலை கிராஸ் பண்ணி ஆட்டோ, சைக்கிள், மக்கள் எல்லாம் இயல்பா போகணுமாம். அதுக்காக கலர் கலரா ட்ரெஸ் போட்ட கூட்டத்தோட, ஒரு குட(ம்) வியாபாரி கதாபாத்திரமும். பவுடர் போட்ட மூஞ்சி, வெள்ளையும் சொள்ளையுமா டிரெஸ், கையில புது சைக்கிள், அதுல நாலே நாலு பிளாஸ்டிக் கொடம். “யாருய்யா இந்த ஏற்பாட்டை பண்ணுனது, முன்னப்பின்ன நீ குட யாவாரியப் பார்த்திருக்கியா”ன்னு கடுப்பாகி கத்த ஆரம்பிச்சிட்டாரு டைரக்டர்.  ஒரு வண்டியில மட்டும் உள்ளூர் ரிஜிஸ்ட்ரேஷன் (டிஎன்.63) நம்பர் இருக்க, “யார்யா நம்பர் பிளேட் செக் பண்ணது”ன்னு மறுபடியும் டென்ஷனாகிட்டாரு. 

‘கேமரா ஆன்’னு சொன்னதும், அந்தக் கூட்டம் மெல்ல நகர. “கட்...கட்” ன்னு கத்துன டைரக்டர், “ஏன்மா, இங்க என்ன ஊர்வலமா நடத்துறாங்க. 2 பேர் முன்னாடி, 2 பேர் சைடுல, 4 பேர் பின்னாடின்னு இயல்பா நடங்கம்மா. அய்யோ... என் உசுர வாங்குறாங்களே, லைட்டிங் வேற போகுதே” என்று புலம்ப ஆரம்பிச்சிட்டாரு. சினிமாவில்தான் கெட்ட வார்த்தைகளுக்கு பீப் போடுறாங்க, சூட்டிங் ஸ்பாட்ல ‘மைக்’ வெச்சு கெட்ட வார்த்தை பேசுறாங்க சினிமா ஆட்கள். அதுலேயும் பாரதிராஜா, பாலா எல்லாம் பீச்சாங் கையாலதான் பேசுவாங்களாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE