பெண்கள் மீது வன்முறையை ஏவாத த்ரில்லருக்கு விருது

By காமதேனு

ஜெ.சரவணன்

பெண்கள் மீது வன்முறையை ஏவாத த்ரில்லருக்கு விருது 



பெரும்பாலான த்ரில்லர் வகை கதையில் பெண்கள் மீது ஏதோ ஒரு வகையிலான வன்முறை  நிகழ்த்தப்படும். ஆனால், பெண்களை அடிப்பது, பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது, கொலை செய்வது உள்ளிட்ட எந்தவித வன்முறையும் இல்லாமல் எழுதப்பட்டுள்ள ஒரு த்ரில்லர் கதைக்கு புதிய இலக்கிய விருதான ‘ஸ்டான்ச் விருது’ கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜாக் செராங் என்பவர் எழுதிய ‘ஆன் தி ஜாவா ரிட்ஜ்’ என்ற த்ரில்லர் நாவலுக்கு இந்த விருதின் முதல் ஆண்டு விருது வழங்கப்பட்டுள்ளது. ஜாக் செராங் எழுதிய மூன்றாவது நாவல் இது. இந்த நாவலில் மிகக் கொடூரமான வன்முறைகள் உள்ளன. ஆனால், அது எதுவும் அவசியமற்றதாக இல்லை. முக்கியமாக எந்த இடத்திலும் பெண்கள் மீது நடத்தும் வன்முறைகள் இடம்பெறவில்லை என்கிறார், ஸ்டான்ச் விருதை உருவாக்கி வழங்கும் பிரிட்ஜெட் லாலெஸ். 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE