குடும்பத்தில் கும்மியடிக்கும் சீரியல்கள்!

By காமதேனு

கே.கே.மகேஷ்

“பொண்டாட்டிய காதலிக்கிறது எப்டி மச்சான்?”ன்னு நண்பன் கேட்டப்ப கெக்கேபிக்கேன்னு கிண்டலா சிரிச்சேன். “டேய்... என் பொண்டாட்டிய காதலிக்கிறது பத்தித்தான் கேட்குறேன்”ன்னு அவன் பரிதாபமாகச் சொன்னதும், “என்னடா ஆச்சு?”ன்னேன்.
“இல்ல மச்சான். ஏதோ சீரியல்ல ஒருத்தன் அவன் பொண்டாட்டிய விழுந்து விழுந்து காதலிக்கானாம். நான் இவளக் கண்டுக்கிறதே இல்லியாம். ‘அழகா ட்ரெஸ் பண்ணி, செமையா மேக்கப் போட்டு வாட்ஸ் - அப் ஸ்டேட்டஸ்ல போட்டோ வெச்சா, யார் யாரெல்லாமோ லைக் பண்றாங்க, ஹார்ட்டின் போடுறாங்க. நீ மட்டும் கண்டுக்கிறதேயில்லை’ன்னு சண்டைக்கு வாரா மச்சி” என்று அவன் சொன்னப்பா கிட்டத்திட்ட அழுகிற மாதிரி இருந்தான்.

“தங்கச்சி நிறைய சீரியல் பாக்குறான்னு நினைக்கேன்டா” என்றேன். “ஹண்ட்ரடு பெர்சென்ட் கரெக்ட் மச்சி. சீரியல்ல எல்லாத்தையும் மிகைப்படுத்தி காட்டுறா னுங்க. இழவு வீட்லேயும் பொம்பளைங்க ஃபுல் மேக்கப்ல இருப்பாங்க. புருஷனே பொண்டாட்டிய துரத்தித் துரத்திக் காதலிப் பான். அந்தக் கண்றாவியப் பாத்துப் பாத்து இவளும் கேரக்டராவே மாறிட்டா மச்சி. நானும் அதுல வர்ற ஹீரோ மாதிரி காதலிச் சுக்கிட்டே திரியணும்னு ஆசைப்படுறா” என்றான்.

நான் எதுவும் பேசல. அவனே தொடர்ந் தான். “அவ காலேஜ் மேட் ஒருத்தன் வாட்ஸ் - அப்ல அவ என்ன டிபி, ஸ்டேட்டஸ் வெச்சாலும் ஆஹா ஓகோன்னு புகழ்றான். அவனை நான் ஓவர்டேக் பண்ணலைன்னா, குடும்பத்துல குட்டிக்கலாட்டா பண்ணிடுவா னோன்னு வேற பயமா இருக்கு” என்றான். எனக்குத் தீர்வு சொல்லத் தெரியல. ஆனா, அந்த சீரியலோட பேரை மட்டும் கேட்டு வெச்சுக்கிட்டேன். எல்லாம் முன்எச்சரிக்கை நடவடிக்கைதான்!
புருஷனையும், பிள்ளைங்களையும் வேலை/பள்ளிக்கு அனுப்பிட்டு வீட்ல தனியா இருக்கிற பொம்பளைங்கதான் டிவி சீரியல்களோட மெயின் டார்க்கெட். அதுக்காகவே நாயகிகளுக்கு முக்கியத் துவம் கொடுக்கிறதோட, ஆண்களை எல்லாம் மிக்சர் பார்ட்டியா காட்டுறாங்க. 
ஆரம்பத்துல, குடும்பம்னாலே ஆயிரத்தெட்டுப் பிரச்சினை இருக்கும், மாமியார்னா பெரிய லெவல்ல சதித்திட்டம் தீட்டுற கேடுகாரி, அண்ணிக்காரி பெரிய சகுனி, மாமனார் ஒரு அம்மாஞ்சி, நாத்தனார் கேரக்டர் சரியில்லாதவன்னு காட்டிக்கிட்டு இருந்த சீரியல்காரங்க, இப்ப வித்தியாசமா ஜிந்திக்க ஆரம்பிச்சிருக்காங்க. 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE