திருவல்லிக்கேணி
ஐஸ்ஹவுஸ் அருகே உள்ள சலூனில்...
“ஏம்பா... ஹேர் கட்டிங்குக்கு நூத்தம்பது ரூபான்னா ரெம்ப ஜாஸ்திப்பா!”
“பெருசு... டெய்லி கட்டிங்குக்கு எவ்வளவோ செலவு பண்ற, எப்பவாச்சும் இங்கே கட்டிங்குக்கு காசு தர்றதுக்கு மட்டும் கஷ்டமாக்கிதாக்கும்?”
“நீ என்னோட முடியையும் எடுத்துக்கிட்டு காசும் இம்புட்டுக் கேட்குற... என்னப்பா இது நியாயம்?”
“வேணும்ன்னா சொல்லு... முடியை பொட்டலம் போட்டு தந்துடுறேன்! பீரோவுக்குள்ள வச்சிக்க!''
சென்னை, எ.எம்.முகமது ரிஸ்வான்.
தஞ்சாவூர்
டீக்கடை ஒன்றில்...
``என்னப்பா...நானும் இடைத்தேர்தல் வரும் ஒரு பத்து பதினைஞ்சாயிரம் தேத்திடலாம்னு பார்த்தா, இந்தப் பசங்க ‘ ஒருவிரல் புரட்சியே...ஊரெல்லாம் வறட்சியே ‘ன்னு ஏதேதோ பாட்டு பாடிட்டு, நம்ம பொழப்பை கெடுத்திடுவானுங்க போலிருக்கே!''
``அதெல்லாம் கவலைப்படாதே! அஞ்சு விரலாலே அஞ்சாறு நோட்டை மடிச்சி வெச்சா, அந்த ஒருவிரல் அஞ்சுக்குள்ளே அடங்கிடும் ! ‘வறட்சி' கண்முன்னே நிற்கும்போது, ‘புரட்சி' யாவது மண்ணாவது! டீ யைச் சொல்லு...டீ யைச்சொல்லு!''
தஞ்சாவூர், தே.ராஜாசிங்ஜெயக்குமார்.