பேசிக்கிட்டாங்க..!

By காமதேனு

மீனாட்சிபுரம்

ஸ்வீட்ஸ்டால் ஒன்றில் இரு இளைஞர்கள்...
“என்னடா பிரேம்! திடீர்ன்னு சட்டையெல்லாம் லூஸாகி... கிரீன் டீ, அருகம்புல் ஜூஸ், வாக்கிங், ஜாக்கிங் அப்படி ஏதாவது..?”
“அட நீ வேற! ஆன்லைன்ல 38 இன்ச்சுக்குப் பதிலா 42 இன்ச்சுல சட்டையை அனுப்பி வைச்சிருக்கான், மாத்துறதுக்கு வழியில்லாம திருஷ்டி பொம்மைக்கு சட்டை போட்ட மாதிரி போட்டுட்டுத் திரியுறேன்!”
“அதானே பார்த்தேன்... நீயாவது டயட்டாவது ?”
- நாகர்கோவில், எ.முகமது ஹுமாயூன்.

தஞ்சாவூர்

டாஸ்மாக்கில் இருவர்...
‘`நாட்டுல டெங்கு, பன்றிக் காய்ச்சல் அதிகமாயிடுச்சு! ஜாக்கிரதையா இருக்கணும்டா!''
‘`அதைத் தடுக்கத்தான் அரசு டாஸ்மாக் திறந்திருக்கே!''
‘`என்னடா உளர்றே? டெங்கு, பன்றிக்காய்ச்சல்க்கும் ‘டாஸ்மாக்’க்கும் என்னடா சம்பந்தம்?''
‘`அட ஞான சூன்யமே! இப்ப... டெங்கு கொசு நம்மை கடிக்குதுன்னு வை! நம்ம ஒடம்புல ஓடற ஆல்கஹாலை உறிஞ்சி, அப்படியே மயங்கிடும்! அப்புறம் எங்கிட்டுக் கடிக்கிறது?''
‘`வெரிகுட்!  அப்ப  குடிமகன்களான நமக்கு, நிதியை  சரிக்கட்டற  பெரும்  பொறுப்போட, நோயைத் தடுக்கும் பொறுப்பும் புதுசா வந்திருக்குன்னு சொல்லு!''
தஞ்சாவூர், தே.ராஜாசிங்ஜெயக்குமார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE