டாக்டர் செல்லய்யா எட்டாப்பு ஃபெயில்!

By காமதேனு

கே.கே.மகேஷ்

எங்க ஏரியாவுல பெரிய மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரின்னா டாக்டர் செல்லய்யாவோட ‘பிம்பிலிக்கா’ கிளினிக் தான். பாம்புக்கடி, தேள்கடி, மம்பட்டி வெட்டுனது, எருமை மாடு மிதிச்சது, தடுமன்(சளி), காய்ச்சல், மேல்கால் வலி, சூடுபிடி, மண்டக்குத்து (தலைவலி), வயத்தால எடுப்புன்னு சகலத்தையும் ஒரே ஊசி மருந்துல சரியாக்கிடுவாரு.

சட்டை காலர் பட்டன் மாதிரி குட்டியா ஒரு மாத்திரை, செவப்புக் கலர்ல ஒரு ஊசி மருந்து ரெண்டையும்தான் பெரும்பாலும் பயன்படுத்துவாரு. “ஆலங்குளம் திராவிடமணி, சுரண்டை அருணகிரியெல்லாம் என்னய்யா டாக்டரு? செல்லய்யா மாரி கைராசியான ஆளுண்டா?”ன்னு சொல்லி அசலூர்க்காரங்க எல்லாம் வர ஆரம்பிச்சிட்டாங்கன்னா பாத்துக்கோங்களேன். உடனே, அவர் என்ன செஞ்சார் தெரியுமா? “இனிமே நீங்க இங்க வர வேண்டியதில்ல. நான் அந்த ஊர்லேயே பிராஞ்ச் ஓப்பன் பண்றேன்’’னு உதயகீதம் மரத்தடி உண்டியல் சாமியார் கவுண்டமணி மாதிரி, ஊர் ஊருக்கு ஒரு கிளினிக் திறந்துட்டாரு. அந்தப் படத்து கவுண்டமணி மாதிரி நடராஜா பஸ் சர்வீஸ், அப்புறம் சைக்கிள், பிறகு மொபட், அப்புறம் பைக், கடைசியா கார்ல போய் வைத்தியம் பாக்குற அளவுக்கு வளந்துட்டாரு. சோலைசேரி, கருவந்தா, நாச்சாரம், வீராணம்னு சுத்துப்பட்டு ஊரெல்லாம் கடை போட்டவரு, ஊத்துமலையில மட்டும் பிராஞ்ச் ஓப்பன் பண்ணல. ஏம்னா, போலீஸ் ஸ்டேஷன் இருக்க ஊர்ல மட்டும் எக்காரணம் கொண்டும் தொழில் பண்ணப்பிடாதுங்கிறது டாக்டர் செல்லய்யா (எட்டாப்பு ஃபெயில்) எடுத்த கொள்(கை)ளை முடிவு!

பொதுவா போலி டாக்டர்கள் எல்லாம் உண்மையான டாக்டர்களோட பிழைப்பைக் கெடுத்து, அவங்களோட வருமானத்துல மண்ணள்ளிப் போடுவாங்க. ஆனா, செல்லய்யா அப்படிக் கெடையாது. சின்னச்சின்ன கோளாறைக்கூட பெரிய கேஸாக்கி பெரிய படிப்பு படிச்ச டாக்டர்களுக்கும் படியளக்கிற பகவான் அவரு. உதாரணத்துக்கு ஒண்ணு சொல்லுதேனே...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE