ஓவியங்களைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல! - டி.எல்.என். ரெட்டி

By காமதேனு

ஜெ.சரவணன்

சென்னை ஃபோகஸ் ஆர்ட் கேலரியில் சமீபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓவியர் டி.எல்.என். ரெட்டியின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஃபிகரேட்டிவ் ஓவியங்களுக்குப் பெயர் பெற்றவர் இவர். இருநூற்றுக்கும் மேற்பட்ட கண்காட்சிகளை இதுவரை நடத்தியிருக்கிறார். நியூயார்க், ஜெர்மனி உள்ளிட்ட உலகின் பல்வேறு இடங்களில் குழு கண்காட்சியிலும் பங்கேற்றிருக்கிறார். ஏ.பி.லலித் கலா அகாடமியிடமிருந்து தங்கப் பதக்கமும் ஓவியத்துக்காகப் பெற்றிருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து...

உங்களுக்குள்ளும் ஒரு ஓவியர் இருக்கிறார் என்பதை எப்போது கண்டுகொண்டீர்கள்?

இளம்பிராயத்தில்தான். அதற்கு முன்னாலும் வரைந்திருக்கிறேன். ஆனால், அவற்றையெல்லாம் ஓவியம் என்று சொல்லிவிட முடியாது. அதுவரை கிறுக்கல்களாக மட்டுமே இருந்தவற்றுக்கு அப்போதுதான்  ஒரு வடிவம் கிடைத்தது என்று சொல்லலாம். அதன்பிறகு முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஹைதராபாத் ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரியில் ஓவியத்தில் டிப்ளமோ படித்தேன். பிறகு, பரோடாவில் உள்ள எம் எஸ் பல்கலைக்கழகத்தில் கிராஃபிக்ஸ் ஆர்ட் படித்தேன். என்னதான் நாமே வரைந்து கற்றுக்கொண்டாலும் சில நுணுக்கங்கள் முறையாகக் கற்றுக்கொண்டால்தான் வரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE