கே.கே.மகேஷ்
“தீபாவளிக்கும் வயசுக்கும் சம்பந்தம் இருக்குது”ன்னு வரலாற்றறிஞர் தீபாவளிக்கினியான் சொல்லியிருப்பது உண்மைதான்போல. ஒவ்வொரு வயசுக்கும் ஒவ்வொரு அனுபவம்.
10 வயசுக்குக் கீழேயிருக்கிற பசங்க 3 மாசத்துக்கு முன்னாடியே தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்குன்னு எண்ண ஆரம்பிச்சிடுவாங்க. ஒரு மாசத்துக்கு முன்னாடியே ‘ரோல்’ துப்பாக்கி கேட்டு அடம் பிடிப்பாங்க. சரியா தீபாவளிக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி அது ரிப்பேராகிடும். அப்புறம் அதைவிட பெரிய பட்ஜெட் துப்பாக்கி கேட்பாங்க. கூடவே, ‘சீமராஜா’ படத்துல சிவகார்த்திகேயன் போட்டிருக்கிற மாதிரி ட்ரெஸ், ‘சர்கார்’ விஜய் மாதிரி கோட்டு எல்லாம் கேட்டு நம்மை கடைகடையா அலைய விடுவானுங்க.
15 வயசுப் பையங்க, லட்சுமி வெடி, தரைச் சக்கரம், புஸ் வாணம், ராக்கெட்னு அப்டேட் ஆனா பரவாயில்லை. நேரடியா ‘அடல்ட்ஸ் ஒன்லி’ வெடி கேட்பாங்க. அதாகப்பட்டது, 18 வயசுக்கு மேற்பட்டவர்கள் வெடிக்கிற வெடி. சரின்னு வாங்கிக் குடுத்தா, அதை கரெக்ட்டா சண்டைக்காரன் வீட்டு முன்னாடி போட்டு, தேவ -அசுர யுத்தத்தைத் தொடங்கி வெச்சிட்டுப் போயிடுவாங்க.