ஒளியும் வண்ணமும் நிகழ்த்தும் மாயாஜாலமே என் வாழ்க்கை- ஆதம் கான்

By காமதேனு

சென்னை ஈசிஆரில் தக்‌ஷிண் சித்ராவில் ஓவியர் ஆதம் கானின் 25 ஓவியங்கள் ‘பேரடைஸ் லாஸ்ட்’ என்ற தலைப்பில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சி அக்டோபர் 28 வரை நடக்கிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆதம் கான் ‘லைவ் பெயின்டிங்’ கான்செப்ட்டில் ஓவியங்கள் வரைபவர். காட்டுயிர்கள், பறவைகள், இயற்கைக் காட்சிகள் உள்ளிட்டவை இவரது ஓவியங்களில் பிரதானமாக இடம்பெற்றுள்ளன. அவரிடம் பேசியதிலிருந்து...

இங்கிலாந்தில் பிறந்த நீங்கள் கொடைக்கானலில் தஞ்சமடைந்த கதை என்ன?

எனக்கு சிறு வயதிலிருந்தே ஓவியனாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், என் பெற்றோருக்குச் சுத்தமாக விருப்பமில்லை. கையில் வெறும் 20 டாலர் பணத்துடன் இத்தாலிக்குப் போனேன். அங்கு பிரபல ஓவியர், சிற்பக் கலைஞர் டேவிட் ரான்ஸ்லியிடம் உதவியாளனாகச் சேர்ந்து கலையைக்  கற்றுக்கொண்டேன். அதன்பிறகு கிரீஸில் அகழ்வாராய்ச்சியில் இருந்தேன். பிறகு, ஏதென்ஸ் ஆர்ட் கேலரியில் பழைய கலைஞர்களின் கலைப் பொருட்களை அப்படியே மறு உருவாக்கம் செய்வது, எகிப்து கலையைக் கற்றுக்கொள்வது என எனது தேடலும் பயணமும் தொடர்ந்தது. 1972-ல் இந்தியா வந்து சேர்ந்தேன். இங்கு என் பெயர் மட்டுமல்ல; வாழ்க்கையும் மாறிவிட்டது.

உலகம் முழுக்கச் சுற்றி பல கலைகளைக் கற்றிருக்கிறீர்கள். ஆனால், இப்போது ரியலிஸ்ட்டிக் பெயின்ட்டிங் மட்டுமே வரைகிறீர்கள். என்ன காரணம்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE