பேசிக்கிட்டாங்க..!

By காமதேனு

நாகர்கோவில்

டீ கடையில் கஸ்டமரும் ஊழியரும்...
“ஆமா... இப்போ என்னது கூடிட்டுன்னு வடை விலையை ஒரு ரூபா கூட்டி இருக்கீங்க?”
“ஐயா! இப்போ விளக்கமாச் சொல்ல நேரமில்ல. சுருக்கமாச் சொன்னா, எங்க முதலாளிக்கு செலவு கூடிட்டு. அவ்வளவுதான் போதுமா?”
- நாகர்கோவில், சாதிக் குல்

எடப்பாடி

மேட்டுத்தெருவில் ஒரு வீட்டில் இளம் தம்பதி...
‘'இன்னிக்கு யார் மூஞ்சுல முழிச்சேன்னு தெரியல... காலைலேருந்து ஒரு வேலையும் உருப்படியா நடக்கலே... கடுப்பா இருக்கு!”
“ஆமாம்... ஒரு சில பீடை புடிச்ச மூஞ்சுல முழிச்சுட்டா அப்படித்தான் இருந்து தொலையும்!”
“அப்படியா... காலைல டீ போட்டுட்டு வந்து நீயா என்னை எழுப்பினே..?”
“ஆங்... டேங்க்ல தண்ணி இல்லை... மோட்டார் போட்டுவிடுனு சொல்லிக்கிட்டு உங்க அம்மாதானே வந்து எழுப்பினாங்க..?”
(பார்ட்டி  சைலன்ட்டாக  மனைவியின்  உள்  அர்த்த  பேச்சையும்  கவனிக்கிறார்!)
- இடைப்பாடி, ஜெ.மாணிக்கவாசகம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE