பேசிக்கிட்டாங்க..!

By காமதேனு

நாகர்கோவில்

ஈத்தா மொழி பகுதியில் உள்ள ஒரு மளிகை கடை முன்பு இருவர்...
“மாப்ளே... உங்க அக்கா நேத்து, ‘நெட்டுல' பார்த்து பிரியாணி செஞ்சிதா... வாயில வைக்க வெளங்கலை...”
“அப்புறம் என்னதா செஞ்சீய..?”
“நாலு வார்த்தை திட்டிபுட்டு எழுந்திட்டேன்... அப்புறம் நாய்க்கி போட்டிருப்பா போல... அந்த நாயே சாப்பிடலைனா பாத்துக்கோ...”
“மொத்தத்துல, எந்த ‘நாயும்' அந்த பிரியாணியை சாப்பிடலைனு சொல்லுங்க...”
- பனங்கொட்டான் விளை, மகேஷ் அப்பாசுவாமி

மதுரை

டவுன் ஹால் ரோடு செல் போன் கடை ஒன்றில் வாடிக்கையாளரும், கடைக்காரரும்...
“அண்ணே, செல்போன் வாங்கி ஒரு வாரம்தான் ஆகுது சார்ஜ் நிக்கமாட்டேங்குது!”
“ஃபேஸ்புக், வாட்ஸ் - அப் யூஸ் பண்றீங்களா?”
“ஆமாண்னே... தெனைக்கும் யு-டியூப்ல பாட்டு கேக்குறேன், வீடியோ கால் போடுறேன்... சாயங்காலமே சார்ஜ் எறங்கிடுது. என்ன ப்ராபளம்னு கொஞ்சம் பாருங்க!”
“ப்ராபளம் உங்க போன்ல இல்ல. அன்லிமிடெட் டேட்டாவுக்கு டயட் கன்ட்ரோல் போடுங்க.. எல்லாம் சரியாயிடும்”
(வாடிக்கையாளர் முறைத்தவாறு செல்போனை வாங்கிச் செல்கிறார்)
- மதுரை, எம். விக்னேஷ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE