நித்தி சொன்னது சித்தியானால்..!

By காமதேனு

குரங்கு, சிங்கம், புலி, பசு என்று எல்லா மிருகங்களும் பேசுவதை நாம் காதார கேட்கப் போகிறோம். இதற்கான சாஃப்ட்வேரை ஸ்ரீலஸ்ரீ நித்யானந்தா சுவாமிகள் கண்டுபிடித்துவிட்டாராம்! அதை ஓராண்டு காலத்துக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்போவதாகவும், அப்போது பசு உள்ளிட்ட மிருகங்கள் தமிழில் மட்டுமல்ல... சமஸ்கிருதத்தில் பேசுவதையும் துல்லியமாக நாம் கேட்கலாம் என்றும்
அவர் பிரகடனம் செய்திருக்கிறார்.

சுவாமிஜி சொன்னது இருக்கட்டும்... உண்மையிலேயே அப்படி ஒரு சாஃப்ட்வேரைக் கண்டிபிடித்து மிருகங்களின் பேச்சு நமக்குப் புரியத் தொடங்கினால் எப்படியிருக்கும்? ஒரு கற்பனை.

கழுதை: பிடிக்காத அரசியல்ல்வாதிங்க, சங்கீத வித்வான்களைக் கழுதை குரல் என்று சொல்லி கேலி செய்யும் அற்ப மானிடர்களே! என்குரல் மோசம்னு உங்களுக்கு யாருய்யா சொன்னா? முதல்ல என்பேரு கழுதைன்னு சொன்னது யாரு?

எம்பேரு ‘ஆம்ஸ்ட்ராங்’. சென்னைக்கு வெள்ளைக்காரன் அவன் இஷ்டத்துக்கு ‘மெட்ராஸ்’ன்னு பேர்வெச்சுக்கிட்ட மாதிரி, ஆம்ஸ்ட்ராங்கான எனக்கு நீங்களே கழுதைன்னு பேரு வெச்சிட்டீங்க. என்னைய புரிஞ்சிக்கிட்ட மனுஷன்னா அதுகவுண்டமணி அண்ணன் ஒருத்தர்தான். “கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனைன்னு பேசுறீங்களே,முன்னப்பின்ன அதுகிட்ட கற்பூரத்தைக் காட்டிருக்கீங்களா?”ன்னு கேட்டாரு பாருங்க. அவர் மனுஷன். அது புரியாம இன்னமும் அந்த இத்துப்போன பழமொழியைச் சொல்லிக்கிட்டுத் திரியுறவங்க எல்லாம் மடச்சாம்பிராணிங்கதான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE