தூரிகை பிடிப்பதில் ஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கை குறைவு. தமிழகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பெண் ஓவியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ரம்யா சதாசிவம் முக்கியமானவர். இவர் மனித முகங்களை பென்சில் மீடியம் மூலம் வரைவதில் திறமையானவர். ஆயில்பெயின்டிங்கில் தொடர்ந்து இந்தியக் கலாச்சாரம், ஆண் பெண்களின் அன்றாட நடவடிக்கைகள் போன்றவற்றையும் வரைந்து வருகிறார். இவர் தனது ஓவியங்களுக்காக தேசிய அளவிலும் மாநில அளவிலும் விருதுகளையும் பெற்றுள்ளார். அவரிடம் பேசியதிலிருந்து...
ஓவியக் கலையை யாரிடம் எப்போது கற்றுக்கொண்டீர்கள்?
சிறுவயதிலிருந்தே ஓவியம் வரைவதில் எனக்கு ஆர்வம் உண்டு. ஆனால், யாரிடமும் எங்கும் போய் கற்றுக் கொள்ளவில்லை. ஆன்லைனில் டெமோ வீடியோக்களைப் பார்த்து ஓவிய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். மற்றபடி என்னுடைய ஆர்வமும் தேடலும்தான். தொடர்ந்து வரைந்து வரைந்து பார்த்து ஓவியம் பழகினேன். இப்போது, பிறருக்குக் கற்றுதரும் அளவுக்கு நான் வளர்ந்துவிட்டதற்கு ஓவியத்தின் மீதான எனது தீராத காதல்தான் காரணம்.
ஓவியத்தில் எப்படியெல்லாம் வித்தியாசமாக முயற்சி செய்திருக்கிறீர்கள்?