‘அர்பன் நக்சல்’ அரசியலைச் சொல்லும் நாடகம்!- ரெஜின் ரோஸ்

By காமதேனு

அர்பன் நக்சல் என்ற புதுப்பதம் உருவாகியிருக்கும் அரசியல் சூழலில் மிக முக்கியமான நாடகத்தை அரங்கற்றி இருக்கிறார் ரெஜின் ரோஸ். செப்டம்பர் 8-ம் தேதி, அலையான்ஸ் ஃப்ராங்கைசில் ‘1084-ன் அம்மா’ என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. இந்த நாடகத்தை இயக்கிய ரெஜின் ரோஸிடம் பேசியதிலிருந்து...

இந்த நாடகத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்?

இது மகாஸ்வேதா தேவி வங்க மொழியில் ‘Mother of 1084' என்ற தலைப்பில் எழுதிய நாவல். பின் அதையே நாடகமாகவும் எழுதியிருக்கிறார். இந்த நாடகத்தை ஜம்புநாதன் மொழி பெயர்த்திருக்கிறார். மக்களுக்காக அரசை எதிர்த்துப் போராடிய மகன் கொல்லப்படுகிறான். அவன்மீது அதீத பாசம் கொண்ட தாய் அவனுடைய பயணத்தைத் தேடிச் செல்கிறாள். இது உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவாக்கப்பட்ட படைப்பு. இது சமகால அரசியலில் கவனிக்கப்பட வேண்டிய படைப்பு என்பதால், இதை இயக்கி இப்போது பொதுவெளியில் அரங்கேற்றி வருகிறோம்.

நாடகம் உருவான விதத்தைச் சொல்லுங்களேன்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE