``எனக்கு வடிவேல்தான் இன்ஸ்பிரேஷன்”- கேப்ரெல்லா

By காமதேனு

மைம் நடிகராக நடிக்க ஆரம்பித்தவர் கேப்ரெல்லா. தெருக்கூத்து, நாடகம், பிறகு விஜய் டிவி கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்து, குறும்படங்கள் நடித்து இப்போது வெப் சீரிஸிலும், சினிமாவிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் நடித்த பல குறும்படங்கள் விருதுகளையும் பெற்றுள்ளன. அவரிடம் பேசியதிலிருந்து...

திருச்சியிலிருந்து சென்னைக்கு நடிக்க வந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்?

என் அப்பா, அம்மா பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள். எங்க வீட்டில் சில தலைமுறைகளில் எல்லாருமே டீச்சர். ஆனால், எனக்கு மட்டும் படிப்பே வரலை. கல்லூரியில் படிக்கும்போதே மைம் நடிப்பு பயிற்சி எடுத்து நடித்து வந்தேன். நடிக்கணும் என்ற ஆசையைத் தவிர மனசில் வேறு எதுவுமே இல்லை. அப்பா அம்மாவுக்குத் தெரியாமலே கல்லூரி படிப்பை பாதியில விட்டுட்டு சென்னைக்கு வந்துட்டேன். அப்பறம் தேடிக் கண்டுபிடிச்சு கூட்டிட்டுப் போனாங்க. திரும்ப அவங்களோட ஆசீர்வாதத்தோட வந்தேன். முதல்முறை சென்னை வந்தப்போ பயந்தேன். இரண்டாவது முறை சென்னை தான் நாம வாழப்போற இடம் அப்படின்ற எண்ணம் அழுத்தமா பதிஞ்சுடுச்சு. அம்மா எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருக்காங்க.

சினிமாத் துறையில் கறுப்பான பெண்களுக்கு வாய்ப்புகள் குறைவு. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE