நிழற்சாலை

By காமதேனு

இப்படித்தான் இவர்

நண்பர் ஒருவரை அலைபேசியில்  
அழைக்கும்போதெல்லாம்...
‘அவர் குளிக்கிறார்’ என்கிற பதிலை
அவர் வீடு சொல்லும்
’குளிக்கிறார்  இருக்கிறாரா..?’
என்றேன்  ஒருநாள்
‘நான்தான் பேசுகிறேன்’ 
என்றார் நண்பர்!
- சென்னை, ஆர்.கே.அருள்செல்வன்

நாதியற்ற நதி...

நதிக்கரை நாகரிகத்தின்
சாட்சியெனக் கண்டெடுத்தோம்...
முதுமக்கள் தாழியும் 
சுடு மண்பானைகளையும்.
கண்மூடித்தனமான 
ஆட்சியாளர்கள் காலம்...
மண்மூடிப் போன
இன்னுமொரு ஆயிரம்
ஆண்டுகள் கழித்து... 
ஆற்றங்கரையோரத்தில்
அகப்படாமலா போய்விடும்
இவர்களின் 
அநாகரிகத்தின் சாட்சியென
நாலு கொக்கோ கோலா,
பெப்சி போத்தல்கள்! 
- கோயம்புத்தூர், வைகை சுரேஷ் 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE