``எந்த வயதிலும் வாழ்க்கை மாறலாம்”- தனம் சந்திரன்

By காமதேனு

டியூபில் இன்றைய தலைமுறை இளைஞர்களின் பேவரைட்டாக இருக்கிறார் தனம் சந்திரன். பெரும்பாலும் இவரை ‘தனம் அம்மா’ என்றுதான் அழைக்கிறார்கள். 57 வயதாகும் இவர் செய்யும் ‘அம்மா அலப்பறைகள்’ எப்போதுமே ஹிட்டுதான். ஆனால், இவருக்கு மூன்றாண்டுகளுக்கு முன்புவரை ஸ்மார்ட்போன், யுடியூப் இதெல்லாம் என்னவென்றே தெரியாது என்பதுதான் ஆச்சரியம். அப்படி இருந்தவர், இப்போது இணையத்தில் ரொம்பவே பிசி. இந்த யுடியூப் நடிகைக்கு இப்போது படவாய்ப்பும் வந்துவிட்டது. அவரிடம் பேசியதிலிருந்து...

எப்படி திடீரென்று நடிக்க வந்தீர்கள்?

மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை நான் சாதாரண ஹவுஸ் ஒய்ஃப். ஆனாலும், இலக்கிய கூட்டங் களிலும் வீதி நாடகங்களிலும் அவ்வப்போது கலந்துகொள்வேன். விடியல் பதிப் பகத்தின் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது பிரசன்னா தம்பி அறிமுகமானார். டீமானிட்டைசேஷன் வந்தபோது அதைக் கலாய்த்து ஒரு வீடியோ செய்யத் திட்டமிட்டிருந்தார். அப்போது ஒரு சின்ன ரோலில் என்னை நடிக்க கூப்பிட்டார். அப்போ விளையாட்டா ஆரம்பிச்சது. அடுத்து, என்ன வச்சு நக்கலைட்ஸ் டீம் ‘அம்மா அலப்பறைகள்’ பண்ணாங்க. அதுக்கப்பறம் என் வாழ்க்கையே மாறிடுச்சு. பசங்க எங்கே என்ன பாத்தாலும் அம்மா அம்மானு ரொம்ப பாசமாப் பேசறாங்க. அவங்க அம்மாகிட்ட அறிமுகப்படுத்தறாங்க. சந்தோஷமா இருக்கு.

நடிப்பதற்கு எப்படித் தயார் ஆகிறீர்கள்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE