பேசிக்கிட்டாங்க..!

By காமதேனு

கோவை
காந்திபுரம் பஸ்நிலையத்தில் இருவர்...
``மச்சி...வசந்தி, வசந்தின்னு உருகுறே... உன்னோட காதலை அவகிட்ட எப்போ சொல்லப் போற?’’
``மாப்ள...கொஞ்சம் பொறு. ரெண்டு மாதத்துல நவராத்திரி வரும்... அப்போ அவங்க வீட்ல கொலு வைப்பாங்க,கொலு பாக்கற சாக்கில் காதலைச் சொல்லிடுறேன்!?’’
``அட போடா...அவனவன் ‘கூகுள்ல' லவ் பண்றான்... நீ என்னன்னா ‘கொலு'வுல லவ்வ சொல்றேங்கிறே!’ இன்றைக்கே சொல்லு, இல்லாட்டி வசந்தியை வாட்ஸ்- அப்புல யாராவது வாரிட்டுப் போயிடப்போறான்!’’
(நண்பர் முழிக்கிறார்)
- கோயம்புத்தூர், டி,ஜெய்சிங்.

அரூர்
 மளிகைக் கடையில் கடைக்காரரும் வாடிக்கையாளரும்...
"ஏங்க.. பருப்பு வாங்குனா ஃபாரீன் போலாம்னு சொல்றாங்களே.. அதெல்லாம் உண்மையாங்க..?"
"அதெப்படிங்க எனக்குத் தெரியும். காசு கொடுங்க... பருப்பு தர்றேன்.. முடிஞ்சா ஃபாரீன் போங்க, இல்லைன்னா வூட்டுக்குப் போங்க.. அதை விட்டுட்டு இப்படி காலங்காத்தால என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க. பருப்பு வேணுமா வேணாமா..?"
"எங்க வூட்ல இருக்குற ரேஷன் பருப்புலேயே குழம்பு வச்சிக்கிறேன். உங்க பருப்பே வேணாம் போங்க."
(கடைக்காரர் கோபமாகப் பார்க்க, வாடிக்கையாளர் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்)
- அரூர், வெ.சென்னப்பன்.

மதுரை
 பெரியார் பேருந்து நிலையத்தில் பேருந்துக்குக் காத்திருந்த இருவர்...
"பாகிஸ்தான் நாடாளுமன்றத்துல இம்ரான் கானை பிரதமரா தேர்ந்தெடுத்துட்டாங்களாமே ?!"
"நேரம்தான்... விளையாடிக்கிட்டு இருந்தவங்க எல்லாம் அரசியலுக்கு வராங்க !"
"நம்ம நாட்டுல அரசியலுக்கு வந்துட்டு விளையாடுறாங்க... அங்கே விளையாடிட்டு அரசியலுக்கு வராங்க... எல்லாம் ஒண்ணுதான்."
- மதுரை, எம்.விக்னேஷ்.

தாம்பரம்
ஒரு கல்லூரி வாசலில் இரு மாணவர்கள்...
"டேய்... நாளைக்கு என் கேர்ள் ஃப்ரெண்டோட பிறந்தநாள். என்ன கிஃப்ட் வாங்கிக் கொடுக்கலாம்னு சொல்டா!"
"உன் கேர்ள் ஃப்ரெண்ட் பார்க்க நல்லாயிருப்பாளா?"
"செம்மயா இருப்பா!"
"அப்படீன்னா என் வாட்ஸ் - அப் நம்பரை கிஃப்டா கொடுத்துடு!"
- சென்னை, எஸ்.ரீனு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE