``ஒவ்வொரு பெற்றோரும் கதை சொல்லிகளாக மாறவேண்டும்''- கதை சொல்லி சதீஷ்

By காமதேனு

தனியார் நிறுவனத்தில் வேலைசெய்துகொண்டிருந்த சதீஷ்குமார், இப்போது முழுநேர கதை சொல்லியாகவே மாறிவிட்டார். பெரும்பாலான நேரங்களில் கோமாளி வேஷத்தில் தான் அவரைக் காண முடிகிறது. எப்தும் குழந்தைகள் சூழ இருக்கும் அவரது உலகம். குழந்தைகளுக்கான நாடகம் போடுவது, பள்ளிகளுக்குச் சென்று கதைகள் சொல்வது என நாட்களை நகர்த்துபவரிடம் பேசிய திலிருந்து...

கதை சொல்வதையே முழு நேர வேலையாகச் செய்கிறீர்களே. கதை என்றால் அவ்வளவு பிடிக்குமா?

யாருக்குத்தான் கதை பிடிக்காது. நான் சிறுவயதாய் இருக்கும்போது என் பக்கத்து வீட்டில் 102 வயதுடைய பாட்டி ஒருவர் இருந்தார். என் வீட்டில் இருந்ததைவிட அவருடன் அதிக நேரம் இருப்பேன். எப்போதும் ஏதாவது கதை சொல்லிக்கொண்டே இருப்பார். அனைத்தும் மனிதர்களைப் பற்றிய கதைகள். சில கதைகள் புரியும், சிலவற்றை வளர்ந்த பின்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நிறுவனத்தில் வேலை பார்ப்பது ஏதோ இயந்திரத்துக்குள் சிக்கிக்கொண்டதுபோல் பட்டது. மனம் அழுத்தத்துக்குள்ளானது. அப்போதுதான் அதிலிருந்து விடுபட பாட்டி சொன்ன கதைகளை மீண்டும் தோண்டி எடுத்தேன். பள்ளிகளுக்குச் சென்று கதை சொல்ல ஆரம்பித்தேன். ஒருகட்டத்தில் இதுதான் நம் உலகம் என்று வேலையை விட்டுவிட்டேன்.

குழந்தைகளைக் கவனிக்க வைப்பது மிகப்பெரிய சவால். அதை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE