தனி மனிதனுக்கு ‘கனவு’ இல்லை எனில்...

By காமதேனு

“கனவு வராத மனுஷங்களே கிடையாது... கனவு வரலைன்னா அவன் மனுஷனே கிடையாது...”ன்னு அப்துல் கலாம் சொல்லியிருக்காரு. (அவர் எப்படா அப்படிச் சொன்னாருன்னு கேட்கப்புடாது. பெரிய மனுஷங்க பேர்ல வர்ற பொன்மொழிகள்ல பாதி, அவங்க செத்த பிறகு உருவாக்கப்படுறதுதான் என்கிற ‘எஸ்டிடி’யை ஞாபகத்துல வெச்சுக்கோங்க.)

பச்சைக்குழந்தைங்க, தொட்டில்ல கெடந்துக்கிட்டு தூக்கத்துலேயே பொக்கவாயால சிரிக்கும். கேட்டா, “கடவுள் கனவுல வந்து வெளையாட்டுக் காட்டுறார்டா” என்று பாட்டி சொல்லும். “திடீர்னு தூக்கத்துலேயே கோபப்பட்டு மூஞ்ச உம்முன்னு வெச்சிக்கிடுதுங்களே..?” என்றால் அதுவும் கடவுளோட வேலைதான் என்பார்கள்.

அதுவே ஆறேழு வயசு என்றால், “ஏம் பந்தைக் குடுடா... பம்பரத்தைக் குடுடா”ன்னு பசங்களும், “அப்பா, இவன் என் கன்னத்துல கிள்ளி வெச்சிட்டான்”ன்னு பொண்ணுங்களும் தூக்கத்துல உளருவாங்க. எல்.கே.ஜி. படிக்கும் என் மகன், “என் சிலேட்டையும், குச்சியையும் காணோம்... என் சிலேட்டு வேணும்” என்று நட்டநடு ராத்திரியில் அழுவான். “ச்சே பிள்ளைக்கு தூக்கத்துலகூட படிப்பு ஞாவகம்தான்” என்று அவனது தாய் புழங்காகிதம் அடைவாள். கடைசியில், “ட்ரூ ட்ரூ” என்று வாயிலேயே பைக் ஓட்டி, “இதோ அப்பா ஸ்கூலுக்குப் போய் எடுத்திட்டு வாரேன்”னு சொன்ன பிறகுதான் பய அழுகையை நிப்பாட்டுவான்.

என் அக்கா பையன் வேற மாதிரி. “ராத்திரி ஒண்ணுக்கு வந்துச்சா... அம்மாவை எழுப்புனேனா... அவங்களும் வந்து பாத்ரூம் கதவைத் திறந்து... லைட் எல்லாம் போட்டு விட்டாங்களா? அப்புறம்தான் மாமா நான் உச்சா இருந்தேன். ஆனா, பெட் நனைஞ்சிருக்கே... எப்பூடி?!” என்று சொல்லியபடி நம்மைச் சந்தேகமா பார்ப்பான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE