“இங்கே ‘கட்’டும் இல்லை... ‘ரீ- டேக்’கும் இல்லை..!”- - கே.ஆர்.சுவர்ணலஷ்மி

By காமதேனு

இந்தியப் பண்பாட்டு மையம் சார்பில் கடந்த வாரம் சென்னை தி.நகர் வாணி மஹாலில் `குறள் அமுது ஆயிரத்தில் ஒருவன்’ என்ற நடன நாடகம் அரங்கேற்றப்பட்டது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த விழாவுக்குத் தலைமை தாங்கினார். இந்த நடன நாடகத்தை இயக்கி அரங்கேற்றிய பன்முகக் கலைஞர் சுவர்ணலஷ்மியிடம் பேசியதிலிருந்து...

திருக்குறளை மையமாக வைத்து நடன நாடகம் உருவாக்கும் யோசனை எப்படித் தோன்றியது?

இது பலரின் கூட்டுமுயற்சியால்தான் சாத்தியமானது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டபோது இதனை நாடகமாகவும் அரங்கேற்றலாம் என்று முடிவு செய்தார். ஒரு குழந்தை பிறந்து பருவம் எய்தி, காதல், கடமை, இல்லற வாழ்க்கை என நகரும் கதையோட்டம். அதற்குப் பொருத்தமான திருக்குறள்களை எடுத்துக் கதையாக்கம் செய்தார். எழுத இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். காரணம், திருக்குறளின் அர்த்தத்தை எளிமையாக விளக்குவது அவ்வளவு எளிதல்ல. என்னுடைய நடனப் பள்ளி மாணவர்களும், கலாஷேத்ரா கலைஞர்களும் இதில் நடித்துள்ளனர்.

இந்த நாடகம் மாறுபட்ட முயற்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கமா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE