“கற்பனையும் கை வண்ணமும்தான் முக்கியம்!”- எஸ்வந்திரன்

By காமதேனு

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள தக்‌ஷிண்சித்ராவில் தொடர்ந்து கலை சார்ந்த நிகழ்ச்சிகளும், கண்காட்சிகளும் நடந்துவருகின்றன. தற்போது நடந்துவரும் கலை முகாமில் ஓவியர்கள், சிற்பிகள், இசைக் கலைஞர்கள் ஆகியோர் பார்வையாளர்களுக்கு நேரடியாகத் தங்களது கலைகள் பற்றியும் அதன் நுணுக்கங்கள் பற்றியும் விளக்கமளித்து வருகின்றனர். முகாமில் பங்கேற்ற கற்சிற்பக் கலைஞர் எஸ்வந்திரனிடம் பேசியதிலிருந்து...

கற்சிற்பக் கலையைத் தேர்ந்தெடுத்தது எப்படி?

என் பெற்றோர் நான் டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டனர். ஆனால், பொருளாதார சூழலால் நான் 12-ம் வகுப்பு முடிந்ததும் வேலைக்குப் போக வேண்டியிருந்தது. சிறுவயதிலிருந்தே எதையாவது வரைந்துகொண்டிருப்பேன். அறிவியல் பாடங்களில் வரும் படங்களை ஆர்வத்துடன் வரைவேன். அப்போதுதான் ஓவியத்தில் ஆர்வம் இருப்பதைக் கண்டுகொண்டேன். அதனாலேயே சைன்போர்டு எழுதும் வேலையில் சேர்ந்தேன். நான் நன்றாக வரைவதைப் பார்த்த என் உறவினர் ஒருவர் ‘சென்னை ஓவியக் கல்லூரியில் முறையாகப் படித்தால் நல்ல எதிர்காலம் அமையுமே’ என்றார். அங்கு நான் செராமிக் கலை பற்றிப் படித்தேன். அங்கிருந்துதான் ஆரம்பமானது என்னுடைய சிற்பக் கலைப்பயணம்.

ஓவியத்துக்கும் சிற்பக் கலைக்கும் என்ன உறவு?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE