உண்மைக்கும் துணிச்சலுக்கும் விருது

By காமதேனு

லக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரிட்டிஷ் நாடக ஆசிரியர் ஹெரால்ட் பின்டர் நினைவாக பென் பின்டர் விருது 2009-லிருந்து வழங்கப்படுகிறது. இந்த விருது இலக்கியத்தில் வாழ்க்கையின், சமூகத்தின் உண்மையான முகத்தைப் பதிவு செய்யும் எழுத்துகளுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நைஜீரியாவைச் சேர்ந்த பெண்ணிய எழுத்தாளர் சிமமந்தா ங்கோசி அடிச்சி, இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிமமந்தாவின் முதல் புத்தகமான ‘Purple Hibiscus’ 2004-ல் காமன்வெல்த் எழுத்தாளர்களுக்கான விருதைப் பெற்றது. மேலும் சில விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். புனைவெழுத்தாளராக மட்டுமல்லாமல் பெண்ணியம் தொடர்பான ‘டெட் டாக்’ உரைகள் மற்றும் கட்டுரைகளுக்காகவும் உலகப் புகழ்பெற்றவர் சிமமந்தா. வரும் அக்டோபர் 9-ம் தேதி நடக்கும் விழாவில் இவ்விருதை பெறவிருக்கிறார் சிமமந்தா. அதோடு கருத்துச் சுதந்திரத்தை ஆதரித்து எழுதியவருக்கான ‘துணிச்சலான எழுத்தாளர்’ விருது பெறுபவரைத் தேர்ந்தெடுத்து அதே மேடையில் அறிவிப்பார் சிமமந்தா.

நூலரங்கம்

துயரத்தை மிஞ்சிய தத்துவம்
ச.ச. சிவசங்கர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE